Azhagiya Megangal Vanathil

Azhagiya Megangal Vanathil Song Lyrics In English


அழகிய மேகங்கள் வானத்தில் திரள அருள் புரிவாய் கங்கா கங்காதாயே அழகிய மேகங்கள் வானத்தில் திரள அருள் புரிவாய் கங்கா

ஆடு மாடுகளும் காடு மேடுகளும் ஆடு மாடுகளும் காடு மேடுகளும் வாடுவதுன் மனம் அறியாதோ அருள் மழையென உன் மனம் உருகாதோ

அழகிய மேகங்கள் வானத்தில் திரள அருள் புரிவாய் கங்கா கங்காதாயே

மாதர்கள் அறமும் அறமும் மன்னர்கள் நலமும் நலமும் உழவர்கள் வளமும் உன்னாலே உன்னாலே மாதர்கள் அறமும் அறமும் மன்னர்கள் நலமும் நலமும் உழவர்கள் வளமும் உன்னாலே உன்னாலே பூவிறிச் சோலை காய்கனி மலர நீரென வருவாய் முன்னாலே பூவிறிச் சோலை காய்கனி மலர நீரென வருவாய் முன்னாலே

ஞானமிக்கதொரு யோகி உள்ளமென தேவி பூமிதனைத் தேடி ஓடி வா தேடி ஓடி வா ஞானமிக்கதொரு யோகி உள்ளமென தேவி பூமிதனைத் தேடி ஓடி வா மழையின் நாயகி நதியின் தேவதை அளவை வருவாய் ஒரு முறை


அழகிய மேகங்கள் வானத்தில் திரள அருள் புரிவாய் கங்கா கங்காதாயே

தாங்கிய சிவனும் சிவனும் வாங்கிய மகனும் மகனும் பாரத பூமிக்கு உனைத் தந்தார் தந்தார் தாங்கிய சிவனும் சிவனும் வாங்கிய மகனும் மகனும் பாரத பூமிக்கு உனைத் தந்தார் தந்தார் வடதிசைத் தோன்றி பலதிசை ஓடி வளம் தரும் உன்னைக் கேட்கின்றார் வடதிசைத் தோன்றி பலதிசை ஓடி வளம் தரும் உன்னைக் கேட்கின்றார்

ஆடும் இருகாலும் இசை பாடும் குரலாலும் ஆடும் இருகாலும் இசை பாடும் குரலாலும் கூடும் குலமாதர் மனம் உருகிட தேடும் மழை வெள்ளம் புவி பெருகிட கூடும் குலமாதர் மனம் உருகிட தேடும் மழை வெள்ளம் புவி பெருகிட நிலத்தில் விழுந்து நடந்து தவழ்ந்து வளத்தைக் கொடுத்து சுகத்தை வழங்கு கங்கா கங்கா கங்கா கங்கா