Azhagiya Poomagal

Azhagiya Poomagal Song Lyrics In English

அழகிய பூமகள் வருகையில் மலர்களை பொழியுது பூமரமே பழகிய தேவதை விழிகளில் ஆயிரம் கனவுகள் ஊர்வலமே

தோகை மயில் ஒரு தூது விடும் தோள்களிலே இனி மாலை விழும் ஆயிரம் ஆயிரம் பூ மலரும்

மார்கழி வேளையில் மன்மதன் சோலையில் மழைத் துளி விழுகிறதே திருமண மாலையும் அழகிய சேலையும் கனவினில் வருகிறதே

பழைய கதை இனி மாறி விடும் பருவ சுகம் இனி ஊறி வரும் வளர்ந்து விரிந்து கொழுந்து எழுந்து மலர்களைத் தழுவிடும் புதிய சுகம்

அழகிய பூமகள் வருகையில் மலர்களை பொழியுது பூமரமே பழகிய தேவதை விழிகளில் ஆயிரம் கனவுகள் ஊர்வலமே

இனியொரு தடையில்லை வழியினில் அணையில்லை நதியினை நகர விடு மங்கல வேளையில் மன்மத சோலையில் மலர்களை மலர விடு

புதிய கலை எனை எழுத விடு மலர் அணையில் எனை மகிழ விடு சிறந்த விருந்து அருந்து விரைந்து இளமையின் அமுதங்கள் பருகி விடு