Azhagu Nilave

Azhagu Nilave Song Lyrics In English


அழகு நிலவே
கதவு திறந்து அருகில்
வந்தாயே எனது கனவை
உனது விழியில் எடுத்து
வந்தாயே ஒரு பாலை
வனமாய் கிடந்த வயிற்றில்
பாலை வார்த்தாயே என்
பாதி உயிரை திருப்பி தரவே
பறந்து வந்தாயே இந்த பாவி
உன்னை சுமந்ததில்லை
நானும் உன் தாயே

சொந்தங்கள்
என்பது தாய் தந்தது
இந்த பந்தங்கள் என்பது
யார் தந்தது இன்னொரு
தாய்மை தான் நான்
கண்டது அட உன் விழி
ஏனடா நீர் கொண்டது
அன்புதான் தியாகமே
அழுகை தான் ஞானமே
உனக்கும் எனக்கும் உள்ள
உறவு ஊருக்கு புரியாதே

அழகு நிலவே
கதவு திறந்து அருகில்
வந்தாயே எனது கனவை
உனது விழியில் எடுத்து
வந்தாயே ஒரு பாலை
வனமாய் கிடந்த வயிற்றில்
பாலை வார்த்தாயே என்
பாதி உயிரை திருப்பி தரவே
பறந்து வந்தாயே இந்த பாவி
உன்னை சுமந்ததில்லை
நானும் உன் தாயே


பூமியை நேசிக்கும்
வேர் போலவே உன் பூ
முகம் நேசிப்பேன் தாயாகவே
நீருக்குள் சுவாசிக்கும் மீன்
போலவே உன் நேசத்தில்
வாழுவேன் நானாகவே
உலகம் தான் மாறுமே
உறவுகள் வாழுமே
கடலை விடவும் ஆழம்
எந்தன் கண்ணீர் துளி
ஒன்றே

அழகு நிலவே
கதவு திறந்து அருகில்
வந்தாயே எனது கனவை
உனது விழியில் எடுத்து
வந்தாயே ஒரு பாலை
வனமாய் கிடந்த வயிற்றில்
பாலை வார்த்தாயே என்
பாதி உயிரை திருப்பி தரவே
பறந்து வந்தாயே இந்த பாவி
உன்னை சுமந்ததில்லை
நானும் உன் தாயே