Bhoomi Yenna Bhoomi

Bhoomi Yenna Bhoomi Song Lyrics In English


பூமி என்ன பூமி இது ஏழை பூமி
சாமி என்ன சாமி அது கோழை சாமி
துன்பங்கள் கண்டால் கண்மூடி கொண்டால்
கோயில்களும் இங்கே தேவையா

பூமி என்ன பூமி இது ஏழை பூமி
சாமி என்ன சாமி அது கோழை சாமி

துட்டுக்காக என்னென்ன வேஷங்கள்
கெட்டுப் போன பின்னாலே கோஷங்கள்
ஓட்டுக்காக என்னென்ன ஜாலங்கள்
ஓடும் நீரில் போட்டார்கள் கோலங்கள்

வண்ணங்கள் சுவர் எங்கும் வண்ணங்கள்
சின்னங்கள் அவமான சின்னங்கள்
இப்போது வாதாடு எப்போதும் போராடு
பாட்டுப் பாடி பஞ்சம் தீராது

பூமி என்ன பூமி இது ஏழை பூமி
சாமி என்ன சாமி அது கோழை சாமி

கட்டுப்பாடு என்றெல்லாம் கூறுவான்
காசுக்காக மதமெல்லாம் மாறுவான்
கட்சிக்காக வீரன் போல் பேசுவான்
காசை வாங்கிக் கொண்டாலோ ஏசுவான்

பிச்சைதான் எல்லாமே பிச்சைதான்
கொச்சைதான் நிகழ்காலம் கொச்சைதான்
யுத்தங்கள் இல்லாமல் ரத்தங்கள் சிந்தாமல்
ஏழை வாழ யோகம் இல்லையோ


பூமி என்ன பூமி இது ஏழை பூமி
சாமி என்ன சாமி அது கோழை சாமி

கருணை கொண்ட நெஞ்சங்கள் தெய்வங்கள்
கண்ணீர் மாற்றும் உள்ளங்கள் கோயில்கள்
புத்தன் காந்தி சொன்னார்கள் பாடங்கள்
புரிந்து கொண்டது யாரென்று பாருங்கள்

உண்மைக்கு ஒரு நாளும் அழிவில்லை
நன்மைக்கு ஒரு நாளும் முடிவில்லை
மாறாத அன்போடு வாழ்கின்ற பண்பாடு
கொண்ட உள்ளம் கோயில் ஆகாதா

பூமி என்ன பூமி இது ஏழை பூமி
சாமி என்ன சாமி அது கோழை சாமி
துன்பங்கள் கண்டால் கண்மூடி கொண்டால்
கோயில்களும் இங்கே தேவையா

பூமி என்ன பூமி இது ஏழை பூமி
சாமி என்ன சாமி அது கோழை சாமி