Boys And Girls Varungalam

Boys And Girls Varungalam Song Lyrics In English




பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்
வருங்காலம் உங்கள் கையில் வாருங்கள்
பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்
பருவத்தின் பாடல் எல்லாம் பாடுங்கள்

கிளி மொழி பேசும் பாவை
பனி பார்வையைக் கண்டு
மணி விழிகள் கனவில் நீந்தும்
பல இளம் காளைகள் உண்டு
நெஞ்சில் கோடி ஆசைகள் உண்டாகும்
காலமல்லவோ
நெஞ்சில் கோடி ஆசைகள் உண்டாகும்
காலமல்லவோ



பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்
வருங்காலம் உங்கள் கையில் வாருங்கள்

வெல்வெட்டு மேனி கொண்ட மஞ்சள்
வண்ண மான்களுக்கு
ஈரெட்டு வயதல்லவோ
வெல்வெட்டு மேனி கொண்ட மஞ்சள்
வண்ண மான்களுக்கு
ஈரெட்டு வயதல்லவோ
உடல் வைரம் பாய்ந்து கிடக்க
புது வேகம் நரம்பில் துடிக்க
அழகிய ரோஜா அனுபவி ராஜா
அழகிய ரோஜா அனுபவி ராஜா
இந்த இளமை மீண்டும் வருமா



ஹோய் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்
வருங்காலம் உங்கள் கையில் வாருங்கள்



பொன்னான வாலிபத்தின் நாடகத்தை
மேடையிட்டு கொண்டாடும் வேளையில்
எதிர்காலம் என்னவென்று
நெஞ்சம் நினைக்க வேண்டும் இன்று
நாளைய உலகில் வாழ்வது நாமே
நாளைய உலகில் வாழ்வது நாமே
இந்த நினைவு நாளும் வேண்டும்



பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்
வருங்காலம் உங்கள் கையில் வாருங்கள்
பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்
பருவத்தின் பாடல் எல்லாம் பாடுங்கள்