Chengkaadhal

Chengkaadhal Song Lyrics In English


இசை அமைப்பாளர் : அலிமிராஜாக்

உன் ஆடை சிந்திய நிறமா
என் கண்கள் ஏந்திய நிறமா
உன் நாணம் தூவிய நிறமா
என் நெஞ்சம் மாறிய நிறமா

அடிவானில் கொஞ்சம்
உன் இதழோடு கொஞ்சம்
கனவோடு கொஞ்சம்
உன் அழகோடு கொஞ்சம்

செங்காதல் செங்காதல்
ஒன்று கொண்டேனடீ
என் எண்ணங்கள் உன் கண்ணில்
மின்னக் கண்டேனடீ

உன் ஆடை சிந்திய நிறமா
என் கண்கள் ஏந்திய நிறமா
உன் நாணம் தூவிய நிறமா
என் நெஞ்சம் மாறிய நிறமா

புரட்சி பேசித் திரிந்தவன்
உன் புருவ நெளிவில் தொலைந்தேன்
கொள்கை பரப்பிக் கிடந்தவன்
உன் கொல்லும் விழியில் விழுந்தேன்

அரசியல் கொஞ்சம்
கொஞ்சும் காதல் கொஞ்சம்
இரண்டையும் ஏந்தி
மகிழுது நெஞ்சம்


செங்காதல் செங்காதல்
ஒன்று கொண்டேனடா
உன் எண்ணங்கள் என் கண்ணில்
மின்னக் கண்டேனடா

உன் ஆடை சிந்திய நிறமா
என் கண்கள் ஏந்திய நிறமா
உன் நாணம் தூவிய நிறமா
என் நெஞ்சம் மாறிய நிறமா

சில பூக்கள் சிந்திய நிறமா
என் குருதியில் மின்னிடும் நிறமா
உன் நாவில் ஏறிய நிறமா
என் நெஞ்சம் மாறிய நிறமா

அடிவானில் கொஞ்சம்
உன் இதழோடு கொஞ்சம்
கனவோடு கொஞ்சம்
உன் அழகோடு கொஞ்சம்

செங்காதல் செங்காதல்
ஒன்று கொண்டேனடீ
என் எண்ணங்கள் உன் கண்ணில்
மின்னக் கண்டேனடீ

சிறு பூக்கள் சிந்திய நிறமா
என் குருதியில் மின்னிடும் நிறமா
உன் நாவில் ஏறிய நிறமா
என் நெஞ்சம் மாறிய நிறமா