Chinna Chinna Malar

Chinna Chinna Malar Song Lyrics In English


உன்னி கிருஷ்ணன் மற்றும் அருண்மொழி

பெண்ணாய் பிறந்த
பெண்ணெல்லாம்
தாயாய் ஆகிட வேண்டும்
தாயாய் ஆனவள் மடி மீது
மழலை ஆடிட வேண்டும்
வாழையடி வாழை என
வந்த குலம் பெருமை பெறும்
புண்ணியவதி உன் வரவால்
பொங்குதடி எங்கள் மனம்
ஓஓஓ

சின்னச் சின்ன
மலர் ஒன்று
அன்னை என்று பெயர் சொல்ல
ஹோய் வளருதடி
தத்தி வரும் கிளி ஒன்று
தந்தை என்று பெயர்
சொல்லதான் வருகுதடி

இன்பம் இன்று இங்கு இருக்கு
இளம் கொடிக்கு ரெண்டில்
ஒரு பங்கு இருக்கு
இன்பம் இன்று தந்த மகள்
கொண்டு வந்த சந்ததிக்கு
சந்தம் உள்ள சிந்து சொல்லடி

ஆண் ஹோய் சின்னச் சின்ன
மலர் ஒன்று
அன்னை என்று பெயர் சொல்ல
ஹோய் வளருதடி
தத்தி வரும் கிளி ஒன்று
தந்தை என்று பெயர்
சொல்லதான் வருகுதடி

சின்னக் கண்ணன் போல்
பிறப்பானோ
ஸ்ரீ ராமன் போல் வருவானோ

ஸ்ரீ தேவிதான் பிறப்பாளோ
இல்லை மீனாட்சிதான் வருவாளோ
என்ன என்னவோ
எந்தன் கற்பனையிலே
நல்ல வண்ண வண்ணக்
கனவுகள் போல்

ஆண் ஹேய் சின்னச் சின்ன
மலர் ஒன்று
அன்னை என்று பெயர் சொல்ல
ஹோய் வளருதடி
தத்தி வரும் கிளி ஒன்று
தந்தை என்று பெயர்
சொல்லதான் வருகுதடி

பூப் போன்ற சிறு முகம் பார்க்க
மனம் பூஞ்சோலை போல் அழகாடும்
அன்ன நடை நடந்து
அல்லி என மலர்ந்து
அள்ளி வரும் ஆனந்தம் கோடி

பூப் போன்ற சிறு முகம் பார்க்க
மனம் பூஞ்சோலை போல் அழகாடும்
அன்ன நடை நடந்து
அல்லி என மலர்ந்து
அள்ளி வரும் ஆனந்தம் கோடி

பேசும் பிள்ளை மொழி கேட்டால்
மனம் பாடும் ராகங்களும் நூறு
முத்தம் சிந்தி வரும் பூவாய்
அதில் நித்தம் தேன் சிதறும் பாகாய்

முத்து விளைந்து வரும்
தத்தி தவழ்ந்து வரும்
சுட்டிப் பிள்ளை
மனதை கட்டிக் கட்டி
சொக்க வைக்க

பெண் சின்னச் சின்ன
மலர் ஒன்று
அன்னை என்று பெயர் சொல்ல
ஹோய் வளருதடி
தத்தி வரும் கிளி ஒன்று
தந்தை என்று பெயர்
சொல்லதான் வருகுதடி


ஆண் சூரியனும் வானைச் சுற்ற
விட்டு வைப்பான்
சந்திரனைச் சாந்து என்று
பொட்டு வைப்பான்
விண்ணவரும் தான் வணங்கும்
வேலன் இந்தச் சின்னவனோ

ஆண் மண்ணுலகம் சுற்றி வந்து
வெற்றி கொள்ளும் மன்னவனோ
சின்னவனோ மன்னவனோ
இந்திரனோ சுந்தரனோ
மன்மதனோ கந்தர்வனோ

ஆஆஆஅதனன னன னன
ஆஆஅஆஅஆஅ

காணாத காட்சிகள் காட்டும்
உந்தன் தாலாட்டிலே மனம் மயங்கும்
தங்க மணி நிலவின்
முல்லை மலர் அழகின்
சங்கமத்தில் ஆனந்தம் கோடி

காணாத காட்சிகள் காட்டும்
உந்தன் தாலாட்டிலே மனம் மயங்கும்
தங்க மணி நிலவின்
முல்லை மலர் அழகின்
சங்கமத்தில் ஆனந்தம் கோடி

கண்ணைச் சிமிட்டி அந்த வானில்
நல்ல வெள்ளி சிரிக்குமடி பெண்ணே
வீணை ஒலிக்கும் அதன் பேச்சில்
அந்த விண்ணும் வளையுமடி கண்ணே

சிந்தும் நவமணிகள்
அன்பே உன் புன்னகையில்
முத்து மணி பதித்த
சித்திரமே அற்புதமே

பெண் சின்னச் சின்ன
மலர் ஒன்று
அன்னை என்று பெயர் சொல்ல
ஹோய் வளருதடி
பெண் தத்தி வரும் கிளி ஒன்று
தந்தை என்று பெயர்
சொல்ல
தான் வருகுதடி

இன்பம் இன்று இங்கு இருக்கு
பெண் இளம் கொடிக்கு ரெண்டில்
ஒரு பங்கு இருக்கு
இன்பம் இன்று தந்த மகள்
கொண்டு வந்த சந்ததிக்கு
சந்தம் உள்ள சிந்து சொல்லடி

பெண் சின்னச் சின்ன
மலர் ஒன்று
அன்னை என்று பெயர் சொல்ல
ஹோய் வளருதடி
பெண் தத்தி வரும் கிளி ஒன்று
தந்தை என்று பெயர்
சொல்ல
தான் வருகுதடி

அனைவரும் : சின்னச் சின்ன
மலர் ஒன்று
அன்னை என்று பெயர் சொல்ல
ஹோய் வளருதடி
தத்தி வரும் கிளி ஒன்று
தந்தை என்று பெயர்
சொல்லதான் வருகுதடி