Chinna Paya Vayasu

Chinna Paya Vayasu Song Lyrics In English

சின்னப்பய மனசு சும்மா இருக்குதில்ல என்ன படுத்துதடியோ

சின்னப்பய மனசு சும்மா இருக்குதில்ல என்ன படுத்துதடியோ கண்ணு படபடக்க நெஞ்சு துடிதுடிக்க கட்டி இழுக்குதடியோ

சங்கதிய வாய விட்டுச் சொல்லலாமா எம் மனச தூண்டி விட்டு சீண்டலாமா என்னச் சுத்தி என்னச் சுத்தி நடப்பதென்ன

சின்னப்பய மனசு சும்மா இருக்குதில்ல என்ன படுத்துதடியோ கண்ணு படபடக்க நெஞ்சு துடிதுடிக்க கட்டி இழுக்குதடியோ

என்னைக் கட்டி ஏதோ இழுத்ததென்று கண்டு கொள்ளத்தானே நான் தவித்திருந்தேன் நீ நடந்த பாதை என் கால் நடக்க யாரும் இல்லை அங்கே நான் உனைக் கண்டேன்

எந்தன் மனம் உன்னிடத்தில் சென்ற பின்பு என்னிடத்தில் திரும்பி வரவும் இல்லையே மண்ணில் வந்த நீரும் திரும்பிச் செல்லுமா கண்கள் சொன்ன காதல் கலைந்து செல்லுமா இன்று வந்த மாற்றம் என்னவோ

சின்னப்பய மனசு சும்மா இருக்குதில்ல என்ன படுத்துதடியோ

வாசமல்லி தேடி என் கையில் ஏந்தி சூடிக் கொண்டு வந்தேன் நான் உனக்காக வாசம் வந்து உன்னை சேராததென்ன வாடி நிற்கும் என் முன் வாராததென்ன

ஊரில் சென்று பூவின் வாசம் ஓரப் பேச்சு பேசும் என்று ஒதுங்கி ஒதுங்கி நிற்கிறேன் காணுகின்ற தோப்பு கண்கள் இமைக்காது காவல் நிற்கும் காட்டில் காட்டிக் கொடுக்காது எங்கிருந்த போதும் காதல் நம்மைத் துரத்தும்