Chinnamma (Male)

Chinnamma (Male) Song Lyrics In English


சின்னம்மா சின்னம்மா
சித்தம் கலங்கிடும் சின்னம்மா ஹோ
மண்ணில் என் ஜீவன் போகாமல்
உன் ஜீவன் போகாது பொன்னம்மா

தாலாட்டு நான் பாட தங்கமே
நீ கொஞ்சம் தூங்கம்மா ஹோ
ஒரு தாலாட்டு நீ பாட
தர்மங்கள் துணையாகும் பாரம்மா

சின்னம்மா சின்னம்மா
சித்தம் கலங்கிடும் சின்னம்மா ஹோ
மண்ணில் என் ஜீவன் போகாமல்
உன் ஜீவன் போகாது பொன்னம்மா

புள்ளத்தாச்சி ஆனப் புள்ள
பூவப்போல சின்னப்புள்ள
கண்ணீர் என்ன கண்ணுக்குள்ள
காத்திருப்பேன் நெஞ்சுக்குள்ள

தருமத்துக்கு கண்ணீர் வந்தா
தெய்வத்துக்கு கண்ணே இல்லை
பொண்ணுக்கொரு துன்பம் வந்தா
பூமியில சாமி இல்ல

பத்துப் புள்ள பெத்து தரவேணும்
சின்னம்மா ஹோய்
தாய்ப்பாலூட்ட நீயுண்டு
தாலாட்ட நானுண்டு செல்லம்மா

சின்னம்மா சின்னம்மா
சித்தம் கலங்கிடும் சின்னம்மா ஹோ
மண்ணில் என் ஜீவன் போகாமல்
உன் ஜீவன் போகாது பொன்னம்மா


சுற்றம் என்ன சொன்னால் என்ன
ஜோசியங்கள் சொன்னால் என்ன
மந்திரங்கள் சொன்னால் என்ன
மருத்துவங்கள் சொன்னால் என்ன

உள்ளுக்குள் ஏதோ ஒன்னு
உன்னப் பத்தி சொல்லும் பெண்ணே
கொள்ளுப் பேரன் பேத்தி கண்டு
குங்குமத்தில் வாழ்வாய் கண்ணே

பிள்ளைக்கு நீ பேரு வைக்க
வேணும் சொல்லம்மா ஹோ
நல்ல பூவோடும் பொட்டோடும்
நீ வாழ்வாய் சின்னம்மா

சின்னம்மா சின்னம்மா
சித்தம் கலங்கிடும் சின்னம்மா ஹோ
மண்ணில் என் ஜீவன் போகாமல்
உன் ஜீவன் போகாது பொன்னம்மா

தாலாட்டு நான் பாட தங்கமே
நீ கொஞ்சம் தூங்கம்மா ஹோ
ஒரு தாலாட்டு நீ பாட
தர்மங்கள் துணையாகும் பாரம்மா
ஒரு தாலாட்டு நீ பாட
தர்மங்கள் துணையாகும் பாரம்மா