Chinnan Sirusu |
---|
தானனா தானனா
நன நன்னானனா ஓ ஓ ஓ
தானனா தன்னா தந்தானனா
தன்னானனா ஓ ஓ ஓ
சின்னஞ்சிறுசுக
மனசுல சிலுசிலுன்னு
சின்னத்தூறல் போட
புத்தம் புதுசாக நெனப்புக்குள்
பொசுபொசுன்னு
பட்டுப்பூக்கள் பூக்க
பொதுவாக பருவம்
ஒரு பூந்தோட்டமாச்சு
வெறும் காடு பிழைக்கும்
ஒரு நீரோட்டமாச்சு
விலகாத உறவு
ஒரு கொண்டாட்டமாச்சு
புத்தம் புதுசாக நெனப்புக்குள்
பொசுபொசுன்னு
பட்டுப்பூக்கள் பூக்க
சின்னஞ்சிறுசுக
மனசுல சிலுசிலுன்னு
சின்னத்தூறல் போட
சிடுமூஞ்சி நீதான்
என்று சொல்லிச்சொல்லி
கிள்ளிக்கிள்ளி சின்னச்சின்ன
சேட்டை செய்தேனாஆஆஅஓ
சந்து பொந்தில் நீதான் வந்த
ஒத்திப்போக ஒத்துக்காம
சண்டியர்போல்
வம்புசெய்தேனா ஓ ஓ ஓ
ஓஒ அரை ட்ரைராயர் போட்டு
பொய்யா நீ பாடாத லாவணி
விரல் சூப்பி நின்ன புள்ள
நீ போட்டாச்சு தாவணி
விளையாட்டா இருந்த முகம்
ஏன் வெளிறு போச்சுஊ
வேற என்ன பூப்பு அடைஞ்சேன்
விவரம் தெரிஞ்சாச்சு
குறும்பாத்தான் திரிஞ்ச
பொண்ணு ஏன் குமரியாச்சு
வேற என்ன உடம்பு உனக்கு
வழங்க முடிவா ஆச்சு
ஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆ
மண்ணாலதான் வீடு கட்டி
நானும் நீயும் வாழுறப்போ
மீன் கொழம்பு
ஆக்கிப் போட்ட நீ ஓஒ
கமரக்கட்டு கடலை முட்டாய்
வாங்கினாக்க வாயில் வச்சு
காக்காக் கடி கடிச்சு
தந்தாய் நீ ஓஒஓஒ
ஓஒகருவாட்டைப் போல தீயில
என் நெஞ்சை வாட்டுன
அங்காள அம்மன் கோவிலில்
கண்ஜாடை காட்டின
அடி ஆத்தி
மனசுக்குள்ள பூ வச்சதாருவிடு
வேறாரு ஆடி அசையும்
அழகுமணித்தேரு
அடி ஆத்தி நெனப்புக்குள்ள
போய் நின்னதாரு
வேறாரு கூச்சம் விடுத்த
ஈச்சம் மரப் பூவு
சின்னஞ்சிறுசுக
மனசுல சிலுசிலுன்னு
சின்னத்தூறல் போட
புத்தம் புதுசாக நெனப்புக்குள்
பொசுபொசுன்னு
பட்டுப்பூக்கள் பூக்க