Chinnanchiru Idhayathil |
|---|
ஹே லேஓஓஓ
சின்னஞ்சிறு இதயத்திலே
மழைத்துளி குதிக்கிறதே
என்ன இந்த சொந்தமென்று
எட்டி எட்டிப் பார்க்கிறதே
மழைத்துளி விழுவது
மண்ணுக்குத்தெரியும்
மழைத்துளி சேரும் இடம்
யாருக்குத்தெரியும்
இது நதியாக ஓடி கடலோடு கூடி
முத்தாகமோ இல்லை உப்பாகுமோ
ஏரே ரி ரோ ஏரே ரே ரரோ
சின்னஞ்சிறு இதயத்திலே
மழைத்துளி குதிக்கிறதே
என்ன இந்த சொந்தமென்று
எட்டி எட்டிப் பார்க்கிறதே
மழைத்துளி விழுவது
மண்ணுக்குத்தெரியும்
மழைத்துளி சேரும் இடம்
யாருக்குத்தெரியும்
இது நதியாக ஓடி கடலோடு கூடி
முத்தாகமோ இல்லை உப்பாகுமோ
ஏரே ரே ரரோ ஏரே ரி ரோ
ஹே லேஓஓஓ ஆஆஆ ஓ
கிளைகளில் பூப்பூத்தால்
ஊருக்குத் தெரிந்துவிடும்
வேரிலும் பூப்பூக்கும்
அதுதான் பெண் இதயம்
பெண் மனதின் காதலெல்லாம்
கைரேகை போலே
வளர வளர கூட வளரும்
இன்னும் கொஞ்சம் மேலே
இது கண்ணாடி பிம்பம்
அதை கைத்தீண்டும் வயது
தினம் அன்பாகி அன்பாகி
அலைப்பாயும் மனது
யகியே யகியே ஏலா
யகி யகி யே
சின்னஞ்சிறு இதயத்திலே
மழைத்துளி குதிக்கிறதே
என்ன இந்த சொந்தமென்று
எட்டி எட்டிப் பார்க்கிறதே
ஒவ்வொரு வயதினிலும்
ஒவ்வொரு கனவிருக்கும்
வாழ்விலே கனவுமயம்
என்பதையே மறந்திருக்கும்
தோழமையின் கைப்பிடித்து
நடந்து சொல்லும்போது
காதலெனும் ஊருக்கது
கூட்டிச்செல்லும் பாரு
சிலர் தெரியாமல் போவார்
சிலர் தெரிந்தே தான் போவார்
இனி எதிர்காலம் என்னாகும்
யார் சொல்லக்கூடும்
ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
சின்னஞ்சிறு இதயத்திலே
மழைத்துளி குதிக்கிறதே
என்ன இந்த சொந்தமென்று
எட்டி எட்டிப் பார்க்கிறதே
ஆண் மற்றும் மழைத்துளி விழுவது
மண்ணுக்குத்தெரியும்
ம்ம்மழைத்துளி சேரும் இடம்
யாருக்குத்தெரியும்
இது நதியாக ஓடி கடலோடு கூடி
முத்தாகமா இல்லை உப்பாகுமா
யகியே யகியே ஏலா
யகி யகி யே
