Chittukuruvi

Chittukuruvi Song Lyrics In English


சிட்டுகுருவி அருவிய
குடிக்க பாக்குது பாக்குது
பட்டாம்பூச்சி வானத்தை
விலைக்கு கேட்குது கேட்குது

எப்போ எப்போ இப்போ இப்போ
நீயும் நானும்
தொட்டு தொட்டு
கொத்தி கொத்தி எப்போ எப்போ
வேண்டும் வேண்டும் என்று என்று
சொல்லு சொல்லு இப்போ இப்போ

சிட்டுகுருவி அருவிய
குடிக்க பாக்குது பாக்குது
பட்டாம்பூச்சி வானத்தை
விலைக்கு கேட்குது கேட்குது

மாதானி தாவணி
மலையை இழுக்க பார்க்குது
எந்தன் அழகை அந்த மலரும்
திரையை விலக்கி பார்க்குது

ஆகாய வெண்ணிலா
இரவை விழுங்க பார்க்குது
ஒற்றை பார்வை உற்று பார்த்து
உயிரை திருடி போனதே

காற்றோடு பேசு ஊற்றோடு ஆடு
கண்ணோடு கனவாடும் வயதல்லவா
சில்லென்று துள்ளி மெல்லென்று பாடு
மேலாடை பருவத்தின் பரிசல்லவா

மண்ணில் வீழ்ந்த விதை போலே
நான் உன்னில் புதைந்தேனே
திசையெட்டும் தெரியாமல்
வழி ஒன்று புரியாமல்
இவள் கண்ணில் நான் இன்று இளைப்பாறினேன்


சிட்டுகுருவி அருவிய
குடிக்க வேண்டுமே வேண்டுமே
பட்டாம்பூச்சி வானத்தை
விலைக்கு வாங்குதே வாங்குதே

கண்ணோடு இன்பம்
காற்றோடு இன்பம்
இன்பங்கள் இல்லாத இடம் இல்லையே
கைவீசி வாழ்ந்து
கதை பேசி பார்க்க
கண்கொண்ட யாருக்கும்
மனம் இல்லையே

பெண் இன்பம் இல்லாமல்
ஆண் இன்பம் அடங்காது
நில் என்று சொன்னாலும்
போ என்று சொன்னாலும்
நீ தானே என் தேக நிழல் அல்லவா

சிட்டுகுருவி அருவிய
குடிக்க பாக்குது பாக்குது
பட்டாம்பூச்சி வானத்தை
விலைக்கு கேட்குது கேட்குது

நீயும் நானும்
தொட்டு தொட்டு
கொத்தி கொத்தி எப்போ எப்போ
வேண்டும் வேண்டும் என்று என்று
சொல்லு சொல்லு இப்போ இப்போ