Come Back |
---|
போனா போட்டும் போனா போட்டும்
வாடா நீ ராஜா
தானா நீயோ தேடி போயி
பண்ணாத தாஜா
போனா போட்டும் போனா போட்டும்
வாடா நீ ராஜா
தானா நீயோ தேடி போயி
பண்ணாத தாஜா
இருக்குடா வாழ்க்கை
நம்ம கண்ணு முன்னாடி
எதுக்குடா கலங்குற
முகம் காட்டும் கண்ணாடி
உன்னவிட சிகரம்
இங்க உயரம் இல்லடா
சிறக நீயும் விரிச்சிபுட்டா
அதுதான் எல்லைடா
கம் பேக் கம் பேக்
கம் பேக் மாமு
கம் பேக் கம் பேக்
கம் பேக் மாமு
நீருக்குள் நீந்திடும்
நெருப்பென வந்திடு
பேருக்கு வாழ்வது
வாழ்க்கை இல்லைடா
போனதை காலத்தின்
கணக்கென்ன கொள்ளடா
வானத்தை வெட்டி நீயும்
வண்ணம் தீட்டடா
அட நொண்டி சாக்கு நீ சொல்லி
தாண்டி போக நீ என்னாத
வண்டி இல்லா சக்கரமா
வாழ்க்கை வேணாண்டா
கம் பேக் கம் பேக்
கம் பேக் மாமு
கம் பேக் கம் பேக்
கம் பேக் மாமு