Devi Devi Nee En Devi

Devi Devi Nee En Devi Song Lyrics In English


தேவி தேவி நீ என் தேவி
தேகத்தில் நீ பாதி நான் மீதி

தேவி தேவி நான் உன் தேவி
தேகத்தில் நீ பாதி நான் மீதி

தேவதை தேன் இதழில்
நானும் ஒரு தேனிசை பாடிடவா

தேனிசை பூ மழையில்
தேவதையும் தேகமும் மூடிடவா

தேவி தேவி நீ என் தேவி
தேகத்தில் நீ பாதி நான் மீதி

தேவி தேவி நீ என் தேவி

குற்றாலக் காற்று வந்தது
கொண்டாட்டம் போடுது
வற்றாமல் ஆசை ஊறுது
வா வா வா என்றது

பட்டாடை போன்ற என் உடல்
பாலாற்றில் ஆடுது
மொட்டாடும் தேகம் என்பது
மோகத்தில் வாடுது

துள்ளுது மெல்லிடையே
என் மனதை கிள்ளுது உன் விழியே
சொல்வது இன்னிசையே தோள் இணைய
தோன்றுது மெல்லிசையே

போதும் போதும்
உங்கள் பாராட்டு
பூவை என்னும் தங்கத் தேரோட்டு

பாலூட்டு தேனூட்டு பாசம் தொட்டு

தேவி தேவி நான் உன் தேவி
தேகத்தில் நீ பாதி நான் மீதி

தேவதை தேன் இதழில்
நானும் ஒரு தேனிசை பாடிடவா

தேனிசை பூ மழையில்
தேவதையும் தேகமும் மூடிடவா


தேவி தேவி நான் உன் தேவி



இப்போது நெஞ்சம் என்பது
ஏதோ போல் ஆனது
எப்போதும் உந்தன் ஞாபகம்
என்னுள்ளே தோணுது

முந்தானை மேகம் மூடுது
என் ஆவல் கூடுது
சிந்தாத தேனைத் தேடுது
சில்லென்று பாடுது

சொல்வதில் வல்லவனே
சொன்னபடி செய்திடும் மன்னவனே
நல் மனம் உள்ளவனே
நல்ல குலநாயகியின் மகனே

ஊடல் காணும் ஒரு வைபோகம்
ஆடல் பாடல் சுகம் கை கூடும்

ஓர் இன்பம் பேரின்பம் ஒன்றாய் வரும்

தேவி தேவி நீ என் தேவி
தேகத்தில் நீ பாதி நான் மீதி

தேவி தேவி நான் உன் தேவி
தேகத்தில் நீ பாதி நான் மீதி

தேவதை தேன் இதழில்
நானும் ஒரு தேனிசை பாடிடவா

தேனிசை பூ மழையில்
தேவதையும் தேகமும் மூடிடவா

தேவி தேவி நீ என் தேவி
தேகத்தில் நீ பாதி நான் மீதி

தேவி தேவி நீ என் தேவி