Ellorudaiya Vazhkaiyilum |
---|
எல்லோருடைய வாழ்க்கையிலும் பொம்பள உண்டு
என்னுடைய வாழ்விலும் ஒரு பொம்பள உண்டு
எல்லோருடைய வாழ்க்கையிலும் பொம்பள உண்டு
என்னுடைய வாழ்விலும் ஒரு பொம்பள உண்டு
அவ காதலியா இல்ல காதகியா
எந்தன் நாயகியா ரெண்டும் கெட்டப் பாதகியா
எல்லோருடைய வாழ்க்கையிலும் பொம்பள உண்டு
என்னுடைய வாழ்விலும் ஒரு பொம்பள உண்டு
உண்மை பொய்ய கண்டறிய
ஞானம் எனக்கில்ல இல்ல
பொய்களையும் நம்பிடும் நான்
தெய்வத்தையும் நம்பவில்ல
மைய கண்ணில் பூசி என்ன
பொய்யால் வளச்சுப் புடிச்சா
கையால் சாம்பல கொழச்சு
எந்தன் நெத்தியில் பட்டைய அடிச்சா
சித்தர்களும் சொன்னதெல்லாம் உன் வாழ்விலே
சித்தரிச்ச தெய்வம் இப்போ என் நெஞ்சிலே
ஏச்சுப்புட்டு போனாளே அவ பொம்பளே
நெஞ்ச விட்டுப் போகாது என் காதலே
அவ பொம்பளையா நான்
அவள நம்பலையா
ஆணுக்கொரு பெண்ணில்லையா
வாழ்க்கையில வம்பில்லையாஐயா
எல்லோருடைய வாழ்க்கையிலும் பொம்பள உண்டு
என்னுடைய வாழ்விலும் ஒரு பொம்பள உண்டு
ஆரிராரோ பாடும் அந்த தாயும்
ஒரு பொம்பள தான்
நெஞ்சு கெடும் பாட்டுச் சொல்லி
தந்தவளும் பொம்பள தான்
காத்துக் காத்து இருந்து அ
வ தூங்க வச்சு படுப்பா
காதல் பார்வ பாத்து
இவ தூக்கத்தையும் கெடுப்பா
தாய விட்டு தூரம் தூரம் நீ போனாலும்
சேய விட்டு நேசம் பாசம் போகாதப்பா
வானத்துல சுத்தும் கழுகு கண் பார்வ தான்
நிலத்துல செத்து அழுகும் பிணம் மீது தான்
அந்த வானத்தப் போல்
அன்னை என்னும் பெண்ணும் உண்டு
கொத்தும் அந்தக் கழுகு போல்
பெண்ணவளும் இங்கு உண்டு
எல்லோருடைய வாழ்க்கையிலும் பொம்பள உண்டு
என்னுடைய வாழ்விலும் ஒரு பொம்பள உண்டு
அவ காதலியா இல்ல காதகியா
எந்தன் நாயகியா ரெண்டும் கெட்டப் பாதகியா
எல்லோருடைய வாழ்க்கையிலும் பொம்பள உண்டு
என்னுடைய வாழ்விலும் ஒரு பொம்பள உண்டு