Ellorukkum Kaalam Varum

Ellorukkum Kaalam Varum Song Lyrics In English


எல்லோருக்கும் காலம் வரும்
சம்பாதிக்க நேரம் வரும்
வருவது எந்த வழியோ
எல்லோருக்கும் காலம் வரும்
சம்பாதிக்க நேரம் வரும்
வருவது எந்த வழியோ

அள்ளித்தர தெய்வம் உண்டு
பூட்டி வைக்க பெட்டி உண்டு
அது வரை என்ன கதையோ
அது வரை என்ன கதையோ

பீச்சரபாம்பீச்சரபாம்பீச்சரபாம்
பீச்சரபாம்பீச்சரபாம்பீச்சரபாம்
பீச்சரபாம்பீச்சரபாம்பீச்சரபாம்
பீச்சரபாம்பீச்சரபாம்பீச்சரபாம்

திறமையிலே எதுவுமில்லை
நேரம் அது தானே வர வேண்டும்

திருப்பதியின் உண்டியல் போல்
செல்வம் அது வீட்டில் உனைத்தேடும்

உண்டானபின் கோடி சொந்தம் வரும்

இல்லாததை சொல்லி வட்டமிடும்
தாளங்கள் மேளங்கள் ஜால்ராக்கள் கூஜாக்கள்
பின்பாட்டுத்தான் பாடி பின்னே வரும்

மூச்சொன்று விட்டாலும்
பேச்சொன்று கை தட்டி
கொண்டாடும் கூட்டங்கள் தானே வரும்

ஆஆஆஆ

எல்லோருக்கும் காலம் வரும்
சம்பாதிக்க நேரம் வரும்
வருவது எந்த வழியோ


இருவர் : அள்ளித்தர தெய்வம் உண்டு
பூட்டி வைக்க பெட்டி உண்டு
அது வரை என்ன கதையோ
அது வரை என்ன கதையோ



வாழ்வதற்கு இரண்டு வழி
நேர்மை அது தேவை சிலகாலம்

நேர்மையிலே பலனில்லையேல்
தேவை நிறைவேறும் வழி மாறும்

அப்பாவிகள் வாழ்வு தப்பானது

அஞ்சாதவன் வாழ்வு தப்பானது
எப்போது வந்தாலும் தப்பாமல் கைப்பற்று
சந்தர்ப்பம்தான் என்றும் பொன்னானது

அப்போது தூங்காதே
பின்னாலே ஏங்காதே
அதிர்ஷ்டத்தில் பங்குண்டு என்றாவது

ஆஅஆஆஆ

இருவர் : எல்லோருக்கும் காலம் வரும்
சம்பாதிக்க நேரம் வரும்
வருவது எந்த வழியோ
அள்ளித்தர தெய்வம் உண்டு
பூட்டி வைக்க பெட்டி உண்டு
அது வரை என்ன கதையோ
அது வரை என்ன கதையோ