En Jeevan Un Kannil

En Jeevan Un Kannil Song Lyrics In English


என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது சொல்லாமல் கொண்டாயே என்னது நீ வார்த்தை சொன்னதில் வாழ்க்கை வந்தது நீ வார்த்தை சொன்னதில் வாழ்க்கை வந்தது காதல் என் மேல் காதல் கொண்டது

என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது சொல்லாமல் கொண்டாயே என்னது

உயிரோடு தேனூறவே ஒரு பார்வை நீ பார்க்கிறாய் விளையாட என் நெஞ்சிலே விதைப் போட்டு நீர் வார்க்கிறாய்

ஒரு பூவில் பழுதென்றால் கொடி என்ன செய்யும் ஒரு பெண்ணில் குறை என்றால் குலம் என்ன செய்யும் நிறம் கொஞ்சம் மாறுங்களேன்

பாவை மனம் தன்னில் பால் மழை பெய்தாய் பாறையிலும் கூட பயிர் தொழில் செய்தாய் இன்று போல என்றும் வாழ்க உயிரே என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது சொல்லாமல் கொண்டாயே என்னது

படம் போட்ட உன் கைகளே வடம் போட்டு எனை ஏய்த்தது உன் பேரை நான் சொன்னதில் என் வாழ்க்கை ருசியானது


பெண்ணோடு பேயுண்டு அந்நாளில் கண்டேன் பெண்ணுக்குள் தாயுண்டு உன்னாலே கண்டேன் விறகொன்று பூப்பூத்தது

தூரிகை கண்ணில் வழிந்தது போதும் துளியென கண்ணா சுகம் வந்து சேரும் உனது வார்த்தை எனது வேதம் உயிரே

என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது சொல்லாமல் கொண்டாயே என்னது வாசல் தேடியே வாழ்க்கை வந்தது உன் வாசல் தேடியே வாழ்க்கை வந்தது காதல் உன் மேல் காதல் கொண்டது

என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது சொல்லாமல் கொண்டாயே என்னது என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது சொல்லாமல் கொண்டாயே என்னது

இருவர் : என் ஜீவன் உன் கண்ணில் உள்ளது சொல்லாமல் கொண்டாயே என்னது லாலால லல லால்லா லால்லா லாலால லல லால்லா லால்லா