En Kadhal – Sid Sriram

En Kadhal – Sid Sriram Song Lyrics In English


பாடகர் : சித் ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

ஓகோ ஓகோ ஓகோ ஓகோ

என் காதலும் என்னாகுதோ தேடி என்னோட நீ இல்லாமலே போடி சொல்லாமலே என் ஆசைகள் கோடி கண்ணீர் துளி கண் மீறுதே

எங்கோ ஒரு புல்லாங்குழல் ஆடி உன் ஞாபகம் உண்டாகுதே பாவி உன்னோட நான் கை கோர்த்தேனே நீ வீசும் கை பொம்மையா நானே

என் உயிரே என் கனவே என் உயிரே

நா என்ன செய்வேனோ காயங்கள் போகாதே யார் வந்து சொன்னாலும் என் நெஞ்சு கேட்காதே

ஓகோ ஓகோ ஓகோ ஓகோ


எப்போதுமே உன் மூச்சுனு நின்னேன் நீ தானடி நீ தானடி சொன்ன ஆனா இப்ப நான் மட்டும் தான் நின்னேன் போதும் என்றே போனாயடி

உன்னோட நான் கண்ணாடியா வந்தேன் சந்தோஷமா முன்னாடி நீ நின்ன என் மேல் விழும் உன் பிம்பமே சொந்தம் என்ற முட்டாள் அடி நானே

என் கனவே என் கதையே என் கனவே

நா என்ன செய்வேனோ காயங்கள் போகாதே யார் வந்து சொன்னாலும் என் நெஞ்சு கேட்காதே

கல்லான இதயமா கண்டாலே உடையுமா நம்ம சேர்ந்து காதலிச்ச வழி பூவெல்லாம் உன்ன உருவாக்குமா

ஓ ஓ ஓ ஓ ஆகாயநா என்ன செய்வேனோ விண்மீனும் காயங்கள் போகாதே கண்ணீரில் யார் வந்து சொன்னாலும் கை சேரும் என் நெஞ்சு கேட்காதே

ஓகோ ஓகோ ஓகோ ஓகோ