Enakaaga Unakaaga

Enakaaga Unakaaga Song Lyrics In English


எனக்காக உனக்காக
வெண்ணிலவின் சாலைகள்
இந்த நிமிஷத்திலே
இந்த நொடிகளிலே
கிடையாதே எல்லைகள்

ஹேய் மனசுக்கு குடை நீட்டாதே
கனவுக்கு சுவர் போடாதே
இரவுகள் பயமாகாதே
ஹோ ஹோ ஹோ

நீ கவலைகள்
விட்டு வெளியே வா
பனிக்குளிரினில் நனைவோம் வா
இரவுக்குத்துணை இருப்போம் வா

நேற்றென்பது போயாச்சு
நாளைகளும் காற்றாச்சா
இன்றென்பது நம் கையில்
இப்போதே சேர்ந்தாச்சு

நேற்றென்பது போயாச்சு
நாளைகளும் காற்றாச்சா
இன்றென்பது நம் கையில்
இப்போதே சேர்ந்தாச்சு

உன்னை என்னோடு
ஒரு மேகமாய்
ஒரு வாசமாய் ஒரு நேசமாய்
கொண்டு போகிறேன்

நகரும் நம் கையில்
நடுச்சாலையில் விளையாடலாம்
கடலோரமாய் கொஞ்சம் தூங்கலாம்

இந்த இந்த நிமிடமாக
இந்த பூமி நின்றுப்போக
நீயும் நானும் மட்டும் வாழும்
இரவோடு இருப்போம்

என்ன என்ன என்ன சோகம்
இன்னும் இன்னும் என்ன ஆகும்
போகப்போகக் காலம் மாறும்
நாளைக்கு என்னென்று
நாளைக்கு நாம் பார்க்கலாம்


நேற்றென்பது போயாச்சு
நாளைகளும் காற்றாச்சா
இன்றென்பது நம் கையில்
இப்போதே சேர்ந்தாச்சு



ஹோ ஹோ
ஹோஹோ ஹோ
ஏஹே ஹ ஹ

ஹோ யாரும் இல்லாத
இந்த சாலைகள் அந்த விளக்குகள்
இந்தப் படகுகள் நமக்காகவே

நீதான் ஒன்றாக
ஒரு மாதிரி இந்த ராத்திரி
அடி சிச்சி வவவ பப்பரே

யாரும் இல்லை என்பதாக
நானம் இங்கு நின்றுப்போக
கூடவந்து தோளில் சாய
நீதானே இருந்தாய்

தள்ளிப்போடும் பிரச்சினைகள்
மீண்டும் வந்துத் தொட்டுப்பார்க்கும்
முற்றுப்புள்ளி வைத்துப்போவோம்
நகம் தன்னை நறுக்கிய விரலொன்று
எதிரி இல்லை