Enakkoru Magan |
---|
ஹோ ஹோ
ஹோய் எனக்கொரு
மகன் பிறப்பான் அவன்
என்னைப் போலவே
இருப்பான் தனக்கொரு
பாதையை வகுக்காமல்
என் தலைவன் வழியிலே
நடப்பான்
ஹேய் எனக்கொரு
மகன் பிறப்பான் அவன்
என்னைப் போலவே
இருப்பான் தனக்கொரு
பாதையை வகுக்காமல்
என் தலைவன் வழியிலே
நடப்பான்
நேற்று நாம்
வாழ்ந்த வாழ்க்கை
விதம் பார்த்து மனித
குலம் வாழ உழைப்பான்
அண்ணன் தம்பியாய்
அன்பு கொள்ளவே
சின்னஞ் சிறுவரை
அழைப்பான்
இரண்டு வரி
கொண்டு மூன்று நெறி
கண்ட குறளின் பொருள்
தேடி செல்வான் நாளை
வருகின்ற வாழ்வு
நமக்கென்று ஏழை முகம்
பார்த்து சொல்வான் ஏழை
முகம் பார்த்து சொல்வான்
எனக்கொரு
மகன் பிறப்பான் அவன்
என்னைப் போலவே
இருப்பான் தனக்கொரு
பாதையை வகுக்காமல்
என் தலைவன் வழியிலே
நடப்பான்
கல்லை கனியாக்க
கனவை நனவாக்க கையில்
ஏர் கொண்டு வருவான் சாந்தி
வழி என்று காந்தி வழி சென்று
கருணை தேன் கொண்டு
தருவான்
உயிரை தமிழுக்கும்
உடலை மண்ணுக்கும்
உதவும் நாள் கண்டு
துடிப்பான் சுற்றி பகை
வந்து சூழும் திரு நாளில்
வெற்றி தோள் கொண்டு
முடிப்பான் வெற்றி தோள்
கொண்டு முடிப்பான்
எனக்கொரு
மகன் பிறப்பான் அவன்
என்னைப் போலவே
இருப்பான் தனக்கொரு
பாதையை வகுக்காமல்
என் தலைவன் வழியிலே
நடப்பான் ஆஹா ஹா
ஆஆ ஓஹோ ஓஹோ
ஹோ