Enathu Raja Sabaiyile

Enathu Raja Sabaiyile Song Lyrics In English


எனது ராஜ சபையிலே ஒரே சங்கீதம்
அதில் இரவு பகல் தூக்கமில்லை
ஒரே சந்தோஷம் ஆஹா ஹாஆ
எனது ராஜ சபையிலே ஒரே சங்கீதம்
அதில் இரவு பகல் தூக்கமில்லை
ஒரே சந்தோஷம்

மனதில் ஒரு களங்கமில்லை
ஒரே கொண்டாட்டம்ம்ம்
அதில் மைவிழியாள் பாடுகின்றாள்
காதல் வண்டாட்டம்ஓஹோ ஹோ
மனதில் ஒரு களங்கமில்லை
ஒரே கொண்டாட்டம்
அதில் மைவிழியாள் பாடுகின்றாள்
காதல் வண்டாட்டம்

ஆஹா ஆஹாஆ
ஆஹ ஹாஆஅஆ

இந்த முகம் எனது வானில்
சந்திரன் அன்றோ
இது எடுத்து சொல்லும் வார்த்தை
எந்தன் மந்திரம் அன்றோ

இந்த முகம் எனது கோயில்
கோபுரமன்றோ
இது எனது நெஞ்சில் மெத்தையிட்ட
தாமரையன்றோ ஓஹோஓஹோ

மனதில் ஒரு களங்கமில்லை
ஒரே கொண்டாட்டம்

காதல் என்ற கடனிலில்
நீ தோணியல்லவாஆ
காதல் என்ற கடனிலில்
நீ தோணியல்லவா
என்னை கைக் கொடுத்து
காக்க வந்த ஞானியல்லவா

ஜாதி மலர் புன்னகை
என் வேதமல்லவா
ஜாதி மலர் புன்னகை
என் வேதமல்லவா
அதில் சத்தமிடும்
உனது இதழ் நாதமல்லவா
நாதமல்லவா


எனது ராஜ சபையிலே
ஒரே சங்கீதம்

பருவக்காலம் மாறும்போது
மாறுவதில்லை
பருவக்காலம் மாறும்போது
மாறுவதில்லை
அது பனி என்றாலும் மழை என்றாலும்
வாடுவதில்லை

உருவத்திலே இளமை சென்று
முதுமை வந்தாலும்
உருவத்திலே இளமை சென்று
முதுமை வந்தாலும்

நம் உள்ளத்திலே முதுமை சென்று
இளமை உண்டாகும்
இளமை உண்டாகும்

இருவர் : நமது ராஜ சபையிலே ஒரே சங்கீதம்
அதில் இரவு பகல் தூக்கமில்லை
ஒரே சந்தோஷம்
ஆஹாஆஹா ஹா
ஓஓஹோ ஓஓ

இருவர் : நமது ராஜ சபையிலே ஒரே சங்கீதம்
அதில் இரவு பகல் தூக்கமில்லை
ஒரே சந்தோஷம்