Endha Vazhi |
---|
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
எந்த வழி போகுமோ
எந்த ஊரு சேருமோ
காத்துக்கு தெசை இருக்கா
எந்த சொந்தம் மாறுமோ
எந்த பந்தம் கூடுமோ
வாழ்வுக்கு கணக்கு இருக்கா
கலூச்சான் குருவி
முள்ளுக்குள் உறங்கும்
வெள்ளந்தி மனசு
துன்பத்தில் மயங்கும்
வேருக்கு மண் துணை
மண்ணுக்கு வேர் துணை
தனியாக ஏதும் வாழாது
எந்த வழி போகுமோ
எந்த ஊரு சேருமோ
காத்துக்கு தெசை இருக்கா
எந்த சொந்தம் மாறுமோ
எந்த பந்தம் கூடுமோ
வாழ்வுக்கு கணக்கு இருக்காஆஅ
ம்ம்ம்ம்ம்ம்ம்
வெளுத்தது பாலு
கருத்தது காக்கா
இதுதான் இதுதான் ஏழை மக்கா
ஒரு சொட்டு கண்ணீர்
உள்ளங்கையில் விழுந்தா
உசிர் தரும் பாவி மக்கஆஅ
நேத்து வச்ச கூளு மட்டும்
சொத்து சுகம் ஆகுமே
அந்த கூழ பகுந்து கொள்ள
ஆளும் பேரும் தேடுமே
பாசக்கார சாதி எங்க கூட்டமே
வேசம் காட்டுனா நெஞ்சுல ஒட்டுமே
இத்து போன வாழ்க்க
இஞ்சி போன உசிரு
உனக்கு நீயே பாரம் அப்பா
ஒத்தையில கடந்தா
நெத்தி தொட்டு பாக்க
தொத்த உயிர் வேணுமப்பா
ரத்த பந்தம் பாத்திருந்தா
பத்து நூறு சொந்தம்தான்
சித்த பந்தம் கூடி வந்தா
சேர்ந்த தெல்லாம் சொந்தம்தான்
சேல கட்டும் கூட்டம்
எல்லாம் தாயிதான்
சோறு போட்டாவ யாருமே சாமிதான்
எந்த வழி போகுமோ
எந்த ஊரு சேருமோ
காத்துக்கு தெசை இருக்கா
எந்த சொந்தம் மாறுமோ
எந்த பந்தம் கூடுமோ
வாழ்வுக்கு கணக்கு இருக்கா
கலூச்சான் குருவி
முள்ளுக்குள் உறங்கும்
வெள்ளந்தி மனசு
துன்பத்தில் மயங்கும்
வேருக்கு மண் துணை
மண்ணுக்கு வேர் துணை
தனியாக ஏதும் வாழாது