Enga Maharaani

Enga Maharaani Song Lyrics In English


எங்க மகராணிக்கென்ன இங்கே கோபம் மலை மேல் இருந்து கீழ் இறங்க வேணும்

எங்க மகராணிக்கென்ன இங்கே கோபம் மலை மேல் இருந்து கீழ் இறங்க வேணும் பொன்னம்மா பூவம்மா கோபம் என்னம்மா செல்லம்மா கொஞ்சம் நீ விட்டுக் கொடம்மா

ஒரு சின்னச் சிரிப்புல நெஞ்சப் பறிக்கிற மல்லிக மொட்டிருக்கு அதக் கண்டு கண்டு இந்த ஊரில் இருக்குற கண்ணுக பட்டிருக்கு

எங்க மகராணிக்கென்ன இங்கே கோபம் மலை மேல் இருந்து கீழ் இறங்க வேணும்

சின்னப் புள்ள போல அடம் புடிக்கிறதென்னத்துக்கு உம் மூக்கு முழியில கோபம் வருவது என்னத்துக்கு கண்ணால ஜாட செஞ்சு கடல் நீர் இரைக்கச் சொன்னா கட்டாயம் செஞ்சு முடிப்போம்

வானில் நடக்கச் சொல்லு விண்மீன் பறிக்கச் சொல்லு வில்லா வளஞ்சு முடிப்போம் அம்மா நீ அழகாக நீராடவே ஆகாய கங்கை நீர் கொண்டு வரவா

பூங்காற்றைப் பூவாக நீ சூடவே பொன்னாக அதை மாற்றிக் கையில் தரவா பக்கத் துணைக்கொரு தேவதையோடு நீ பேசணுமா கட்டிடும் சேலைக்கு வானவில் வண்ணங்கள் பூசணுமா

சொல்வதைத் தட்டாமச் செய்யிறோம் கட்டளை இட்டு விடு அண்ணன் பொண்ணக் கட்டும் நிலை ஒன்னு மட்டும் வேணா எங்கள விட்டு விடு

எங்க மகராணிக்கென்ன இருவர் : எங்க மகராணிக்கென்ன இங்கே கோபம் மலை மேல் இருந்து கீழ் இறங்க வேணும்



ஆத்தாவ பாத்துக்கத்தான் அழகான பொண்ணு ஒன்னு ஆத்தூரில் பாத்து முடிச்சோம்

ஹே பாத்தாப் பசி மறக்கும் பாலூறும் வண்ண முகம் பஞ்சாங்க தேதி குறிச்சோம்

மருதாணி பூசாம செக்கச் செவப்பா மலநாட்டு மானாக துள்ளி நடப்பா குக்குக்கூ குயில் கூவ பாடங்கள் சொல்லிக் கொடுப்பா

குளிர் வாடை மலராகி கொஞ்சி சிரிப்பா எத்தனை வேலைகள் செய்தாலும் பூ முகம் பூத்திருப்பா காவலுக்கும் உந்தன் ஏவலுக்கும் அவ காத்திருப்பா

காத்திருக்கும் அந்தப் பொன் மகள் யார் என்று சொல்லட்டுமா அட வேறு யாரும் இல்லை மாமன் மகள்தானே இப்போது சந்தோஷமா

எங்க மகராணிக்கென்ன இங்கே கோபம் மலை மேல் இருந்து கீழ் இறங்க வேணும் பொன்னம்மா பூவம்மா கோபம் என்னம்மா செல்லம்மா கொஞ்சம் நீ விட்டுக் கொடம்மா

இருவர் : ஒரு சின்னச் சிரிப்புல நெஞ்சப் பறிக்கிற மல்லிக மொட்டிருக்கு அதக் கண்டு கண்டு இந்த ஊரில் இருக்குற கண்ணுக பட்டிருக்கு

இருவர் : எங்க மகராணிக்கென்ன இங்கே கோபம் மலை மேல் இருந்து கீழ் இறங்க வேணும்