Enga Pora |
---|
எங்க போற மகனே
நீ எங்க போற மகனே ஊர
விட்டு போற தாய் வேர
விட்டு போற சண்டாள
கணமே விட்டு போறாது
உன் இனமே இருக்குது
எட்டு திசை நீ போறது
எந்த திசை
சிரிப்பை மறந்தாய்
சின்னதாக இறந்தாய் உனக்கு
மருந்தாய் இருக்கிறாள் ஒரு
தாய் குத்தி வச்ச அரிசி தான்
உலையில கிடக்குது பெத்து
போட்ட வயிறுதான் பத்தி
கிட்டு எரியுது
எங்க போற மகனே
நீ எங்க போற மகனே ஊர
விட்டு போற தாய் வேர
விட்டு போற சண்டாள
கணமே விட்டு போறாது
உன் இனமே இருக்குது
எட்டு திசை நீ போறது
எந்த திசை
வெத்தல கொடி
ஒன்னு நெருப்புல படர்ந்திரிச்சி
பெத்தவளின் மடி பிரியும்
பெருந்துயர் நடந்திரிச்சே
சோறு ஊட்டும் சொந்தம்
பந்தம் சூழ்ச்சியாக பேசிரிச்சே
வேர் அறுக்க சாதி சனம்
வெட்டருவா வீசிரிச்சே
என்ன இது கணக்கு
இடி மட்டும் உனக்கு சாதிசனம்
எதுக்கு சாமியும் தான் எதுக்கு
வெயிலை சொமந்து வித்து
கிட்டு போறதெங்கே இருட்ட
பாய்போல் சுருட்டி கிட்டு
போவதெங்கே
எங்க போற மகனே
நீ எங்க போற மகனே ஊர
விட்டு போற தாய் வேர
விட்டு போற சண்டாள
கணமே விட்டு போறாது
உன் இனமே இருக்குது
எட்டு திசை நீ போறது
எந்த திசை
வழித்துணை
இல்லாம வனவாசம்
போவது போல் கரை
இல்லா நதியாட்டம்
கந்தா நீயும் போறதெங்கே
கல் விழுந்த
குளம் போல கலங்கிருச்சே
உன் பொழப்பு பூ விழுந்த
கண்ண போல போயிருச்சே
உன் பொழப்பு
நெஞ்சுக்குழி ஓரம்
பச்ச குத்தி போனேன் பச்சைக்கிளி
ஒன்னு காத்துகிட்டு கிடக்கு செல்லமே
செடியே செங்காட்டு சித்திரமே முல்லையே
கொடியா உப்பரத்து வழி நீயே
எங்க போற மகனே
நீ எங்க போற மகனே ஊர
விட்டு போற தாய் வேர
விட்டு போற சண்டாள
கணமே விட்டு போறாது
உன் இனமே இருக்குது
எட்டு திசை நீ போறது
எந்த திசை