Enga Veettu Kalyanam |
|---|
இசை அமைப்பாளர் : தேவா
எங்க வீட்டு கல்யாணம்
எல்லோருக்கும் சந்தோஷம்
சிங்கக்குட்டி போல மணமகன் தான்
ஆஹான் எங்க வீட்டு கல்யாணம்
எல்லோருக்கும் சந்தோஷம்
சிங்கக்குட்டி போல மணமகன் தான்
கண்ணுபடும் பேரழகு கல்யாணப்பொண்ணு
கன்னத்துல திருஷ்ட்டி போட்டு வச்சிக்க ஒண்ணு
நல்ல ஜோடிதான் ஒண்ணு சேர்ந்தது
நம்ம வீதியே வந்து வாழ்த்துது
எங்க நெஞ்சுக்குள் சந்தோசம் பூப்பூத்தது
அனைவரும் : எங்க வீட்டு கல்யாணம்
எல்லோருக்கும் சந்தோஷம்
சிங்கக்குட்டி போல மணமகன் தான்
வள்ளுவன் வாசுகி போல் இல்லறத்தை தொடங்கணும்
இல்லறத்தின் காதலை இருவரும் வளர்க்கணும்
தண்டவாளம் அது போல் உள்ளம் ரெண்டும் மெய்லு
அதில் தான் ஓடணும் குடும்பத்து ட்ரெயின்னு
வீட்டின் பெரியோர்கள் ஆலமரம்
விழுதுகளாய் நீங்கள் தாங்கிடணும்
ஒரு முத்துமாலை நம் குடும்பம் அம்மா
அதில் ரத்தினமாய் நீ ஜொலித்திடணும்
முப்பது நாளும் பௌர்ணமி போல்
உங்கள் முகம்தான் அன்பால் மலர்ந்திடணும்
நல்ல குடும்பத்தின் இலக்கணம்
இதுதான் கேட்டுங்கோங்க
அனைவரும் : எங்க வீட்டு கல்யாணம்
எல்லோருக்கும் சந்தோஷம்
சிங்கக்குட்டி போல மணமகன் தான்
நம்ம தமிழ் வழக்கம்போல்
நலங்கு ஒண்ணு பாடணும்
மாப்பிள்ளையும் பொண்ணும் சேர்ந்து
பல்லாங்குழி ஆடணும்
பால் பழத்த முடிச்சதும்
பஞ்சணைக்கு போகணும்
பஞ்சணையின் கொஞ்சலிலே
நெஞ்சம் ரெண்டும் குளிரணும்
தலைமுறை தழைக்க பிள்ளைகள் பிறக்கணும்
தாய்மொழி கல்வியை ஊட்டிடணும்
வருவதை கொஞ்சம் சேமிக்கணும் உங்க
திறமையை அதிலே காமிக்கணும்
வரும் விருந்தை அழைக்கணும் அன்போடு
அது தமிழர் நமது பண்பாடு
மனம் நிறைவான குடும்பமே பல்கலைக்கழகம்
எங்க வீட்டு கல்யாணம்
எல்லோருக்கும் சந்தோஷம்
சிங்கக்குட்டி போல மணமகன் தான்
கண்ணுபடும் பேரழகு கல்யாணப்பொண்ணு
கன்னத்துல திருஷ்ட்டி போட்டு வச்சிக்க ஒண்ணு
நல்ல ஜோடிதான் ஒண்ணு சேர்ந்தது
நம்ம வீதியே வந்து வாழ்த்துது
எங்க நெஞ்சுக்குள் சந்தோசம் பூப்பூத்தது
அனைவரும் : எங்க வீட்டு கல்யாணம்
எல்லோருக்கும் சந்தோஷம்
சிங்கக்குட்டி போல மணமகன் தான்
ஏ ஏ ஏ ஏ ஏ ஏ
