Engal Kathai

Engal Kathai Song Lyrics In English


எங்கள் கதை இது உங்களின் கதை
எங்கள் கதை இது உங்களின் கதை
சாலை எங்கள் பாடச்சாலை
வேலை தேடல் எங்கள் வேலை ஹோ வாலிபமே
டீக்கடையே ஆலயமே

எங்கள் கதை இது உங்களின் கதை
ஹா ஹா ஆஆ ஆ
எங்கள் கதை இது உங்களின் கதை

நாங்கள் விடும் புகைமண்டலம்
மேகங்களாய் ஆகாதோ
ஒரு பட்டம் வாங்கினோம்
அதில் பட்டம் விடுகிறோம்
புது சட்டம் இடுகிறோம் பாருங்கள்

எங்கள் கதை இது உங்களின் கதை
எங்கள் கதை இது உங்களின் கதை

அழுவதும் விழுவதும்
எழுவதும் தொழுவதும்
பழையவர் பரம்பரைகள்
இருப்பதை எடுப்பதும்
சிரிப்பதும் கொடுப்பதும்
புது யுக வரைமுறைகள்
சிங்கங்களேசேருங்களேன்
கனவில் நுரைகள் வடியட்டும்


எங்கள் கதை இது உங்களின் கதை
ஹா எங்கள் கதை இது உங்களின் கதை

பொன்னுலகின் மாளிகை திறக்கும்
பூங்காற்று நீந்தி வரும்
பூமாலை வாங்கி வரும்
தேசமெங்கும் ஆடுங்கள்
ராஜராகம் பாடுங்கள்
எடுப்போம் சபதம் முடிப்போம்

எங்கள் கதை இது உங்களின் கதை
எங்கள் கதை இது உங்களின் கதை
சாலை எங்கள் பாடச்சாலை
வேலை தேடல் எங்கள் வேலை ஹோ வாலிபமே
டீக்கடையே ஆலயமே