Engirunthu Paarthalum

Engirunthu Paarthalum Song Lyrics In English


எங்கிருந்து பார்த்தாலும்
வானம் ஒன்றுதான்
என்ன தீர்ப்பு வந்தாலும்
வாழ்க்கை ஒன்றுதான்
எது வந்தாலும் வரட்டும்

எங்கிருந்து பார்த்தாலும்
வானம் ஒன்றுதான்
என்ன தீர்ப்பு வந்தாலும்
வாழ்க்கை ஒன்றுதான்
எது வந்தாலும் வரட்டும்
என்னும் இதயம் வேண்டும் எவர்க்கும்
எது வந்தாலும் வரட்டும்
என்னும் இதயம் வேண்டும் எவர்க்கும்

எங்கிருந்து பார்த்தாலும்
வானம் ஒன்றுதான்
என்ன தீர்ப்பு வந்தாலும்
வாழ்க்கை ஒன்றுதான்

நீ படித்த சட்டம் என்றால்
மாற்றி வைக்கலாம்
அந்த ஊழ்வினையின் சட்டத்தை யார்
மாற்றி வைப்பது
நீ படித்த சட்டம் என்றால்
மாற்றி வைக்கலாம்
அந்த ஊழ்வினையின் சட்டத்தை யார்
மாற்றி வைப்பது

ஊருக்கென்று தீர்ப்பெழுதி
பார்த்தவனை இப்பொழுது
தன்னுடைய தீர்ப்பெழுத ஆணையிட்டது
விதி தத்துவத்தை என்னவென்று காட்டி விட்டது

எங்கிருந்து பார்த்தாலும்
வானம் ஒன்றுதான்
என்ன தீர்ப்பு வந்தாலும்
வாழ்க்கை ஒன்றுதான்

பந்தல் ஒன்று பூங்கொடிக்கு
போட்டு வைத்தது
அந்த பந்தலிலே தீப்பிடித்தால்
என்ன செய்வது


கண்கள் சிந்தும் நீரினிலே
தீயணைத்து பார்த்தவரும்
கற்பனையை ஏன் வளர்த்தாய் பேதை உள்ளமே
ஒரு கை தடுத்து நிற்பதுண்டா கால வெள்ளமே

எங்கிருந்து பார்த்தாலும்
வானம் ஒன்றுதான்
என்ன தீர்ப்பு வந்தாலும்
வாழ்க்கை ஒன்றுதான்

சொந்த பந்தம் இல்லாமல்
வாழ்க்கையும் இல்லை
அந்த சொந்த பந்தம் இல்லையென்றால்
துன்பமுமில்லை

இன்பம் என்ற ஏடெடுத்து
துன்பம் என்ற பாட்டெழுதி
ஏக்கத்திலே நாள் முழுதும்
பாடி நிற்கிறோம்
ஒருநாள் தூக்கத்திலே கண்ணிரெண்டை
மூடி வைக்கிறோம்

எங்கிருந்து பார்த்தாலும்
வானம் ஒன்றுதான்
என்ன தீர்ப்பு வந்தாலும்
வாழ்க்கை ஒன்றுதான்
எது வந்தாலும் வரட்டும்
என்னும் இதயம் வேண்டும் எவர்க்கும்

எங்கிருந்து பார்த்தாலும்
வானம் ஒன்றுதான்
என்ன தீர்ப்பு வந்தாலும்
வாழ்க்கை ஒன்றுதான்