Enna Satham Indha Neram

Enna Satham Indha Neram Song Lyrics In English


என்ன சத்தம் இந்த
நேரம் உயிரின் ஒளியா
என்ன சத்தம் இந்த நேரம்
நதியின் ஒளியா கிளிகள்
முத்தம் தருதா அதனால்
சத்தம் வருதா அடடா ஆ

என்ன சத்தம் இந்த
நேரம் உயிரின் ஒளியா
என்ன சத்தம் இந்த நேரம்
நதியின் ஒளியா

கன்னத்தில்
முத்தத்தின் ஈரம் அது
காயவில்லையே கண்களில்
ஏன் அந்த கண்ணீர் அது யாராலே
கன்னியின் கழுத்தை பார்த்தால்
மணமாகவில்லையே காதலன்
மடியில் பூத்தாள் ஒரு பூ போலே

மன்னவனே உன்
விழியால் பெண் விழியை
மூடு ஆதரவாய் சாய்ந்து
விட்டால் ஆரிராரோ பாடு
ஆரிராரோ இவர் யார் எவரோ
பதில் சொல்வார் யாரோ

என்ன சத்தம் இந்த
நேரம் உயிரின் ஒளியா
என்ன சத்தம் இந்த நேரம்
நதியின் ஒளியா கிளிகள்
முத்தம் தருதா அதனால்
சத்தம் வருதா அடடா ஆ

என்ன சத்தம் இந்த
நேரம் உயிரின் ஒளியா
என்ன சத்தம் இந்த நேரம்
நதியின் ஒளியா


கூந்தலில் நுழைந்த
கைகள் ஒரு கோலம் போடுதோ
தன்னிலை மறந்த பெண்மை
அதை தாங்காதோ உதட்டில்
துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து
போனதோ உள்ளங்கள் துடிக்கும்
ஓசை இசை ஆகாதோ

மங்கையிவள் வாய்
திறந்தால் மல்லிகை பூ வாசம்
ஓடையெல்லாம் பெண் பெயரை
உச்சரித்தே பேசும் யார் இவர்கள்
இரு பூங்குயில்கள் இளம் காதல்
மான்கள்

என்ன சத்தம் இந்த
நேரம் உயிரின் ஒளியா
என்ன சத்தம் இந்த நேரம்
நதியின் ஒளியா கிளிகள்
முத்தம் தருதா அதனால்
சத்தம் வருதா அடடா ஆ

என்ன சத்தம் இந்த
நேரம் உயிரின் ஒளியா
என்ன சத்தம் இந்த நேரம்
நதியின் ஒளியா