Enna Than Solvadhu |
---|
இசை அமைப்பாளர் : எல் வைத்தியநாதன்
என்னதான் சொல்வது
என் பெண்மையே உன்னது
ஏங்கிடும் என் மனம்
என்றுமே உன்னது
தனிமை எல்லாம் பாரமானது
உனக்கு தெரியாது
என் தலையணை எல்லாம் ஈரமானது
உனக்கு தெரியாது
தலையணை உனக்கு நான்தான்
என்பது உனக்கு தெரியாது
தலைவனும் உனக்கு நான்தான் என்பது
உனக்கு தெரியாது
என்னதான் சொல்வது
என் பெண்மையே உன்னது
ஏங்கிடும் என் மனம்
என்றுமே உன்னது
பாடம் படிக்கையில் உன் பேர் படிப்பேன்
உனக்கு தெரியாது
நான் பருவம் கொண்டதும் உன்னை நினைத்தேன்
உனக்கு தெரியாது
ஆயிரம் கடிதம் வடித்து வைத்தேன்
உனக்கு தெரியாது
ஆனால் அஞ்சலில் எதையும் அனுப்பவில்லை
உனக்கு தெரியாது
என்னதான் சொல்வது
என் பெண்மையே உன்னது
ஏங்கிடும் என் மனம்
என்றுமே உன்னது
ஊமை போல் உன் பேர் சொன்னேன்
உனக்கு தெரியாது
ஆனால் அன்பை மறைத்துக் கொண்டேன்
உனக்கு தெரியாது
ஜாடையில் மெல்ல ஜாதகம் சொன்னது
உனக்கு தெரியாது
மேலாடையும் நழுவி ஆசைகள் சொன்னது
உனக்கு தெரியாது
ஏங்கிடும் என் மனம்
என்றுமே உன்னது
என்னதான் சொல்வது
என் பெண்மையே உன்னது
ம்ம்ம்மம்மம்ம்ம்ம்
லாலாலலலாலா