Ennala Marakka Mudiyavillai

Ennala Marakka Mudiyavillai Song Lyrics In English


டிஜே கேன் ஆன் தி பீட்டு
ஹச்ஏவிஓசி மதன்
ஹச்ஏவிஓசி நவீன்
ஹச்ஏவிஓசி பிரதர்ஸ்
ஹச்ஏவிஓசி புரொடக்சன் எல்ஸ்
கம் பேக்

ஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஆஆஆஆ

இதுவரை நான்
கண்டு கொண்ட உறவு நீ தந்தது
இதுவரை நான்
கண்டு கொண்ட கனவு நீ தந்தது

கண்ண மூடி கண் மேலே
முத்தம் கொடுக்கலாம் நீ சொன்னது
கைய பிடித்துக் கொண்டு
நடந்து போகலாம் நீ சொன்னது

மனது மனதுக்கு
வலிக்கவில்லை
உணர்வு உணர்வின்னும் குறையவில்லை
குறைந்தால் கண்கள் கலங்கி விடும்
வலியில் உயிரை போக்கிவிடும்

உன்னால இருக்கின்ற
எந்தன் காதல் வலியே
நீ இருக்கும் பொழுது
இல்லை இந்த வலியே
நீ தூரமா போகவே
மனம் வலிக்கின்றதே
நீ இல்லாமல் போகவே

என்னால மறக்க முடியவில்லை
அவனுக்கு வலிகள் தெரியவில்லை
மனது தாங்கவில்லை
என்னால ஏற்றுக்கொள்ள முடியவில்லை

கண்கள் இமையை மூடி கொண்டேன்
கனவில் வந்து வந்து சென்றாய்
காதல் நம்பி சென்றேன்
இன்று காயம் கொண்டு வந்தேன்

நெஞ்சில் பூவாகே(2)

இவள் பூ போல் இசைத்தாலே போதுமடா
இந்த உலகத்துக்கு இவள் நெஞ்சம் கிடைக்குமடா
அவளை பார்க்காமல் உலகம் இருண்டுமடா
எந்தன் கண்கள் அவளுக்கே அழுகுமடா

இரவெல்லாம் பத்தினி
என்னைக்கொல்லும் ராட்சசி
தினமெல்லாம் எனை
கொள்ளை கொள்ளும் மோகினி
நீ எந்தன் விளக்கு
அணையாத விளக்கு
நீதானே எந்தனது குத்து விளக்கு

சிரிப்பிலும் வலியிலும்
உன்னோடு கலந்திருக்கனும்
கனவிலும் நினைவிலும்
உன்னோடு சேர்ந்து இருக்கணும்

ஹச்ஏ விஓசி மதன் மதன்
ஹச்ஏவிஓசி மதன்


என்னால மறக்க முடியவில்லை
அவனுக்கு வலிகள் தெரியவில்லை
மனது தாங்கவில்லை
என்னால ஏற்றுக்கொள்ள முடியவில்லை

கண்கள் இமையை மூடி கொண்டேன்
கனவில் வந்து வந்து சென்றாய்
காதல் நம்பி சென்றேன்
இன்று காயம் கொண்டு வந்தேன்

காதலா போகாதே
தூரமாய்தாங்காதே
என் பிஞ்சு மனமே
காதலா போகாதே தாங்காதே
என் பிஞ்சு மனம்

பார்வை போதுமே
பார்த்தால் புரிந்துகொள்வேன்
ஒரு வார்த்தை போதுமே
சொன்னால் விலகிப்போவேன்

நான் உனக்காவே
உயிர் வாழ்கிறேன்
உனக்காவே நான் வாழ்கிறேன் நானே

பார்வையாலே இழுக்காதே
உன் வார்த்தையாலே கொல்லாதே
நீ சொன்ன வார்த்தை போதும்
உன்னைவிட்டு விலக
நம் கடந்த காதல் பயணங்கள்
சிறு கண்ணீர் சிறு துன்பம்
சிறு சோகம் பலநாள் இன்பம்
அது போதும் புள்ள

இரவு மணி 12 ஆச்சி
தூக்கம் வேற போயாச்சி
தேவதை நின்றாள் காண
என் உள்ளம் உன்னை பாக்க
இன்னும் நூறு ஜென்மம்
ஒன்றாய் சேர்ந்து வாழ சொன்னாலும்
வாழும் காலம் யாரும்
துணையாக வேண்டும்

விரும்பி போனால் விலகிப்போகும்
விலகிப்போனால் விரும்பிவரும்
விரும்பி வருவதை டேக் கேர்
விலகிப்போவதை டோன்ட் கேர்
அடிமேல் அடிவைத்து
என் மனதில் நுழைந்தவளே
மாடி வீட்டு கன்னி பொண்ணு
மனசுக்குள் ரெண்டு ஆசை
எந்த ஆசை எங்கு வைத்து
காட்டிடுவேன் அன்பு தொல்லை
காதலியே

ஹச்ஏவிஓசி மதன்
ஹச்ஏவிஓசி நவீன்
பீஸ் 1 2 3
கோ

என்னால மறக்க முடியவில்லை
அவனுக்கு வலிகள் தெரியவில்லை
மனது தாங்கவில்லை
என்னால ஏற்றுக்கொள்ள முடியவில்லை

கண்கள் இமையை மூடி கொண்டேன்
கனவில் வந்து வந்து சென்றாய்
காதல் நம்பி சென்றேன்
இன்று காயம் கொண்டு வந்தேன்