Ennathukku Enna Pethaa

Ennathukku Enna Pethaa Song Lyrics In English


என்னத்துக்கு என்ன பெத்தா ஆத்தா
அப்பனோட சண்ட போடவா
எல்லாத்தையும் இப்ப எண்ணிப் பாத்தா
என் விதிய குத்தம் கூறவா
தாயைத்தான் காக்கும் பிள்ள
தந்தைக்கு ஆகல
ஒண்ணுமே புரியல ரெண்டும் கெட்டான் எம்பாடு

என்னத்துக்கு என்ன பெத்தா ஆத்தா
அப்பனோட சண்ட போடவா

மொத்தத்தில நானும் இப்போ
மத்தளத்த போலதான்
ரெண்டு பக்கம் வாங்கும் அடி
என் உடம்பு மேலதான்
தர்மத்துக்கு காவல் நின்னே
தாயின் பக்கம் வாழுறேன்
சட்டத்துக்கு காவல் நிக்கும்
அப்பன் கிட்ட மோதுறேன்

யாரால் வந்த சாபம் இது
எப்போ செஞ்ச பாவம்
நானே கேட்டு நானே வாடுறேன்
சொன்னா ரொம்ப வெக்கம் இத
சொல்லாட்டி என் துக்கம்
நாட்ட விட்டு காட்டில் வாழுறேன்
போராடி பாக்கப் போறேன்
யாருன்னு காட்டப் போறேன்
வீரம் உள்ள நெஞ்சம் இங்கேதான்ஆன்

என்னத்துக்கு என்ன பெத்தா ஆத்தா
அப்பனோட சண்ட போடவா


தாலி போட்ட புருஷன் கையே
தூக்கு போட துடிக்குது
தாய் மனசு பிள்ள கிட்ட
காரணத்த மறைக்குது
தன் விழிய கை விரலே
குத்தி விடப் பாக்குது
என்னென்னவோ நடக்குதிங்கே
மர்மமாய் இருக்குது

போடா என்ன வாழ்க்க
நான் போட்டு பாத்தேன் கணக்க
மூனும் மூனு திக்கில் நிக்கிது
பட்டால் தெரியும் சாமி
இது பொல்லாதவன் பூமி
நீதி நியாயம் தூக்கில் தொங்குது
ஏதேதோ சட்ட திட்டம் எல்லாமே ரொம்ப மட்டம்
சொல்லிச் சொல்லி கண்ணீர் விட்டாச்சுஊ

என்னத்துக்கு என்ன பெத்தா ஆத்தா
அப்பனோட சண்ட போடவா
எல்லாத்தையும் இப்ப எண்ணிப் பாத்தா
என் விதிய குத்தம் கூறவா
தாயைத்தான் காக்கும் பிள்ள
தந்தைக்கு ஆகல
ஒண்ணுமே புரியல ரெண்டும் கெட்டான் எம்பாடு

என்னத்துக்கு என்ன பெத்தா ஆத்தா
அப்பனோட சண்ட போடவா
எல்லாத்தையும் இப்ப எண்ணிப் பாத்தா
என் விதிய குத்தம் கூறவா