Entha Velu

Entha Velu Song Lyrics In English


எந்த வேலு வந்தாலும்
கந்த வேலின் முன்னாலே
சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம்
அட எதிரு வேலு வந்தாலும்
கதிரு வேலு முன்னாலே
சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம்

நல்லவர்க்கு தொல்லை தர
நூறு முகம் வந்தாலும்
அல்லல்களை நீக்கி விடும் ஆறு முகம் எந்நாளும்

நம்பினால் பக்கம் இருப்பான் ஓஓ
வெற்றி மேல் வெற்றி கொடுப்பான் ஓஓ

எந்த வேலு வந்தாலும்
கந்த வேலின் முன்னாலே
சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம்

அட எதிரு வேலு வந்தாலும்
கதிரு வேலு முன்னாலே
சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம்

கொள்ளையடிப்பவனும் சன்னிதியில்
கந்தனை வந்தனை பண்ணுகிறான்

ஊரைக் கெடுப்பவனும்
தென்பழனி சந்தனம் குங்குமம் பூசுகிறான்

கள்ளக்கணக்கெழுதும் பொய்யனும் தான்
ஷண்முகக் கவசம் பாடுகிறான்

மோசம் புரிபவனும் இங்கு வந்து
மொட்டையும் பட்டையும் போடுகிறான்

மந்திரியானாலுமே
மண்டியிட்டு கும்பிடுறான்
தன்னிடத்தை தக்க வைக்க
வேலவனை நம்பிடுறான்

குத்தங்களப் பொறுப்பான்
கெட்ட புத்திய வேரறுப்பான்
அருள் வாக்குரைப்பான் வரம் கொடுப்பான்
வள்ளியின் நாயகனே

எந்த வேலு வந்தாலும்
கந்த வேலின் முன்னாலே
சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம்

எதிரு வேலு வந்தாலும்
கதிரு வேலு முன்னாலே
சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம்

ஆண் வெற்றி வேல் பாதா சரணம் சரணம்

பெண் வள்ளி மயில் நாதா சரணம் சரணம்

ஆண் வந்தவரைக் காப்பாய் சரணம் சரணம்

பெண் வல்வினையைத் தீர்ப்பாய் சரணம் சரணம்

எட்டு திசை மணக்க
கந்தனுக்கு வந்தது சந்தனக் காவடியே

வெள்ளி மணி குலுங்க
வேலனுக்கு வந்தது முன் மலர்க் காவடியே

மத்தளங்கள் முழங்க
மன்னனுக்கு வந்தது பொன் மயில் காவடியே

மந்திரங்கள் துலங்க
ஐயனுக்கு வந்தது பால் குடக் காவடியே

காவடியத் தூக்கிக்கிட்டு
சேவடியத் தேடி வந்தோம்
நெஞ்சுருக அரோகரா பாட்டெடுத்து பாடி வந்தோம்


கார்த்திகைக் குமரன்
தமிழ் வாழ்த்திடும் அழகன்
தை மாசத்திலே பூசத்திலே எத்தனைக் காவடியோ

எந்த வேலு வந்தாலும்
கந்த வேலின் முன்னாலே
சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம்
அட எதிரு வேலு வந்தாலும்
கதிரு வேலு முன்னாலே
சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம்

நல்லவர்க்கு தொல்லை தர
நூறு முகம் வந்தாலும்
அல்லல்களை நீக்கி விடும் ஆறு முகம் எந்நாளும்

நம்பினால் பக்கம் இருப்பான் ஓஓ
வெற்றி மேல் வெற்றி கொடுப்பான் ஓஓ

இருவர் : எந்த வேலு வந்தாலும்
கந்த வேலின் முன்னாலே
சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம்
அட எதிரு வேலு வந்தாலும்
கதிரு வேலு முன்னாலே
சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம்

வேல் வேல்

சக்தி வேல்

வேல் வேல்

ஞான வேல்

வேல் வேல்

வீர வேல்

வேல் வேல்

வெற்றி வேல்

கந்தனுக்கு

அரோகரா

கடம்பனுக்கு

அரோகரா

முருகனுக்கு

அரோகரா

குமரனுக்கு

அரோகரா