Enthan Anbe Sonthame

Enthan Anbe Sonthame Song Lyrics In English


பாடகர்கள் : எஸ் ஜானகி மற்றும் பி ஜெயச்சந்திரன்

பாடலாசிரியர் : வாலி

எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும் எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும் விண்மீன்கள் உதிரும் காலம் வரினும் உள்ளமது மாறுமோ உன்னை விட்டு போகுமோ

எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும் எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்

மன்னவன் எந்தன் நெஞ்சம் மங்கை நீ வாழும் மஞ்சம் கண்ணிலே காதல் கொஞ்சும் கன்னி நான் உந்தன் தஞ்சம்

எனது மனம் என்றும் உன்னோடு வேறு ஒரு பெண்ணை நாடாது இளமை பொங்கும் கன்னி பூமாது இன்னொருவர் கையில் சேராது

ஓடும் நதியே உன்னை தொடர்ந்து தினம் வரும் நிழல் நானே உள்ளமது மாறுமோ உன்னை விட்டு போகுமோ


எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும் எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும்

வண்ணங்கள் வானில் மாறும் வாழ்க்கையும் ஓர் நாள் மாறும் காலங்கள் மாறும்போதும் காதலோ நெஞ்சில் வாழும்

வளரும் பிறை வானில் தேய்ந்தாலும் அன்பு மனம் என்றும் தேயாது இமயமது சாய்ந்து வீழ்ந்தாலும் என்றும் இந்த காதல் சாயாது

வாழும் வரைக்கும் நம்மை பிரிக்க தடை இங்கே இல்லை என்றேன் உள்ளமது மாறுமோ உன்னை விட்டு போகுமோ

எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும் எந்தன் அன்பே சொந்தமே நீதான் என்றும் விண்மீன்கள் உதிரும் காலம் வரினும் உள்ளமது மாறுமோ உன்னை விட்டு போகுமோ

இருவர் : உள்ளமது மாறுமோ உன்னை விட்டு போகுமோ