Etho Nadagam Nadanthathu

Etho Nadagam Nadanthathu Song Lyrics In English


ஏதோ நாடகம் நடந்தது போலே ஞாபகம் ஏதோ நாடகம் நடந்தது போலே ஞாபகம் கடல் ஓரமாய் அந்தி நேரமாய் ஒன்று கூடினோம் சிந்து பாடினோம் உனக்கில்லையா அந்த வேதனை காதல் சோதனை

ஏதோ நாடகம் நடந்தது போலே ஞாபகம்

இமைகளும் முள்ளாய் மாறும் விழிகளை காயம் செய்யும் காலம் வந்ததே நினைத்திட சொன்ன நெஞ்சம் மறந்திட சொல்லும் வஞ்சம் ஞாயம் அல்லவே

காற்றும் பாதை மாறலாம் கங்கை தாழ்ந்தும் போகலாம் உயிர் கலந்த சொந்தம் இது பொய்யாய் போவதா

ஏதோ நாடகம் நடந்தது போலே ஞாபகம்


உள்ளது உள்ளம் ஒன்று ஒருவனுக்காக என்று வாழும் பெண் மனம் மேடையில் போடும் வேஷம் கலைப்பது அல்ல பாசம் காதல் சத்தியம்

நீயே எந்தன் சன்னதி நீயே எந்தன் நிம்மதி இனியே ஏது என் வானிலே காதல் பௌர்ணமி

ஏதோ நாடகம் நடந்தது போலே ஞாபகம் கடல் ஓரமாய் அந்தி நேரமாய் ஒன்று கூடினோம் சிந்து பாடினோம் உனக்கில்லையா அந்த வேதனை காதல் சோதனை

ஏதோ நாடகம் நடந்தது போலே ஞாபகம் ஏதோ நாடகம் நடந்தது போலே ஞாபகம்