Gaana Kuyile Sad |
---|
ஓ ஓ ஓ ஓ ஓ
கானக் குயிலே கண் உறக்கம் போனதடி
காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி
கண் இமைகள் மூடுமோ
என் கண்மணியைக் கூடுமோ
தென்றல் தொட்டு தூது சொல்லம்மா
சொல்லில் வர தாமதமா ஓ
நல்ல பதில் வேண்டுமம்மா
கானக் குயிலே கண் உறக்கம் போனதடி
காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி
ஏழைப் பாவலன் பாடும் பாடலில்
ஏக்கம் கலந்ததடி கண்மணி
கூரைக் குடிசையை மாடம் ஏற்குமோ
முன்னே சாட்சிக்கு வெண்மணி
காதல் ராகத்தில் கானல் வரிகளா
போதும் அந்த சோகம்
சேரும் நேரத்தில் போடும் அணையிலா
சிந்தை கலைந்து போகும்
நாளை என்று வேளை உண்டு
நம்பிக்கையை கொள்ளச் சொல்லம்மா
நாளை வரும் மாலையம்மா
கானக் குயிலே கண் உறக்கம் போனதடி
காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி
கம்பன் மகனுக்கும் மன்னன் மகளுக்கும்
காதல் பிறந்ததென்ன காரணம்
சிந்தை முழுவதும் ஜீவன் முழுவதும்
சேரும் நினைவு பரிபூரணம்
உன்னில் என் மனம் ஒன்றாய் கலந்தது
உண்மை ஆகிடும் தேகம்
என்னை உன் வசம் என்றோ கொடுத்தது
மின்னும் காதல் மோகம்
நாளை என்னும் நாளை எண்ணி
நம்பிக்கையை கொள்ளச் சொல்லம்மா
நன்மை வந்து கூடுமம்மா
கானக் குயிலே கண் உறக்கம் போனதடி
காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி
கண் இமைகள் மூடுமோ
என் கண்மணியைக் கூடுமோ
தென்றல் தொட்டு தூது சொல்லம்மா
சொல்லில் வர தாமதமா ஓ
நல்ல பதில் வேண்டுமம்மா
கானக் குயிலே கண் உறக்கம் போனதடி
காதல் கவிதை நெஞ்செழுதிப் பாடுதடி
கண் இமைகள் மூடுமோ
என் கண்மணியைக் கூடுமோ