Ganak Karunguyile Kadhal

Ganak Karunguyile Kadhal Song Lyrics In English


கே எஸ் சித்ரா மற்றும் எஸ் என் சுரேந்தர்

ஆண் : கானக் கருங்குயிலே காதல் பரீட்சையிலே பாஸ்தான் பூவா சிரிக்கட்டுமே பொன்னா ஜொலிக்கட்டுமே பேஸ்தான் பெண் : அட போராட்டம் முடிஞ்சது நம்ம பொழுதும் தான் விடிஞ்சது தேரோட்டம் நடத்துற திருநாளும் பொறந்தது

குழு : பங்குனி போயி சித்திரை வந்தா கல்யாணம் நடக்கும் கானக் கருங்குயிலே காதல் பரீட்சையிலே பாஸ்தான் பூவா சிரிக்கட்டுமே பொன்னா ஜொலிக்கட்டுமே பேஸ்தான்

பெண் : பார்த்தேன் பஞ்சாங்கம் தான் கேட்டேன் ஆரூடம் தான் தேடி வந்தாச்சு யோகம் ஆண் : தேனும் பூவோடத்தான் பூவும் வண்டோடத்தான் தேதி பார்க்காம சேரும்

ஆண் : எடுத்த காரியம் பூமியில் யார்தான் தடுத்த போதிலும் நாம் முடிப்போம் ஆண் : தொடுத்த மாலையில் பூக்களப் போல அடுத்த ஜென்மமும் சேர்ந்திருப்போம்

பெண் : ஆனந்தம் தான் ஆரம்பம் தான் குழு : ஹேய் ஆனந்தம் தான் ஆரம்பம் தான் ஆட்டம் பாட்டம் கூட்டம் போட்டு நாம் கொண்டாட ஆண் : கானக் கருங்குயிலே காதல் பரீட்சையிலே பாஸ்தான் பூவா சிரிக்கட்டுமே பொன்னா ஜொலிக்கட்டுமே பேஸ்தான்


பெண் : நீல வானத்திலே நீந்தும் மேகங்களாய் நாமும் ஊர்கோலம் போவோம் ஆண் : ஹா வானம் தொட்டாலென்ன வையம் விட்டாலென்ன ஜீவன் ஒன்றாக ஆவோம்

ஆண் : கலைந்து போய்விடும் மேகங்கள் அல்ல நிலைத்து வாழ்கிற காவியம் நாம் ஆண் : கரைந்து போய்விடும் சாயங்கள் அல்ல கலைஞன் ஆக்கிய கற்சிலை நாம்

பெண் : பூமாலை தான் பொன்னூஞ்சல் தான் பூமாலை தான் பொன்னூஞ்சல் தான் பந்தம் சொந்தம் என்றும் என்றும் ஊர் பாராட்ட

ஆண் : கானக் கருங்குயிலே காதல் பரீட்சையிலே பாஸ்தான் பூவா சிரிக்கட்டுமே பொன்னா ஜொலிக்கட்டுமே பேஸ்தான் பெண் : அட போராட்டம் முடிஞ்சது நம்ம பொழுதும் தான் விடிஞ்சது தேரோட்டம் நடத்துற திருநாளும் பொறந்தது

குழு : பங்குனி போயி சித்திரை வந்தா கல்யாணம் நடக்கும் லாலலலாலாலாலலலாலாலாலாலல்ல்ல்ல்லா