Ganga Yamuna Sarsawathi |
|---|
கங்கா யமுனா சரஸ்வதி
கங்கா யமுனா சரஸ்வதி
நீங்கள் குளித்த மூன்று நதி
கடலினில் விழு முன் புனிதத்தை இழந்தது
காரணம் உங்கள் தீய மதி
கடலினில் விழு முன் புனிதத்தை இழந்தது
காரணம் உங்கள் தீய மதி
கங்கா யமுனா சரஸ்வதி
நீங்கள் குளித்த மூன்று நதி
ஆயிரம் கவிதைகள் பாடி என்
அங்கங்களில் விளையாடி
ஆயிரம் கவிதைகள் பாடி என்
அங்கங்களில் விளையாடி
தேய்கின்ற பிறையென மாற்றி
கற்பு தீயினை அணைத்தாய் நீரூற்றி
இல்லறம் என்பது நல்லறம் என்றிவள்
எண்ணியிருந்தது கண்ணியமற்றது என்றாயே
என் மன்னவா
இன்னொரு பெண்ணிடம் ஆசை வளர்த்தவன்
நல்லவன் போலொரு நாடகமிட்டவன்
என் வாழ்வில் நீயல்லவா
என் வாழ்வில் நீயல்லவா
கங்கா யமுனா சரஸ்வதி
நீங்கள் குளித்த மூன்று நதி
கடலினில் விழு முன் புனிதத்தை இழந்தது
காரணம் உங்கள் தீய மதி
தாமரைப்பூவினை நாடி சொன்ன சத்திய
வார்த்தைகள் கோடி
தாமரைப்பூவினை நாடி சொன்ன சத்திய
வார்த்தைகள் கோடி
காமனைப் போல் உறவாடி இன்று
கலங்க வைத்தாயே வாடி
ரம்பை த்லோதமை ஊர்வசி என்றென்னை
நம்பவும் வைத்தனை நன்றி இழந்தனை
என் வாழ்வு சோகமன்றோ
நல்ல குலத்தினில் வந்து பிறந்தவள்
உன்னை நினைத்தவள் தன்னை மறந்தவள்
தெய்வீக ராகமன்றோ
தெய்வீக ராகமன்றோ
கங்கா யமுனா சரஸ்வதி
நீங்கள் குளித்த மூன்று நதி
கடலினில் விழு முன் புனிதத்தை இழந்தது
காரணம் உங்கள் தீய மதி
ஆலிலை மேகலை பாட்டு நான்
ஆனந்தமடைந்தேன் கேட்டு
ஆலிலை மேகலை பாட்டு நான்
ஆனந்தமடைந்தேன் கேட்டு
காலத்தில் அருந்திய விருத்து பின்
கசந்ததுவோ சுகம் மறந்து
சொர்க்கம் இருப்பதை கண்டு பிடித்திட
பக்கம் இருந்தொரு பாடம் உரைத்தனை
அப்போது அறிவில்லையே
தத சுகத்தினை நெஞ்சில் நினைத்தது
வந்த இடத்தினை கண்டு பிடித்தது
இப்போதும் விடவில்லையோ
கங்கா யமுனா சரஸ்வதி
நீங்கள் குளித்த மூன்று நதி
கடலினில் விழு முன் புனிதத்தை இழந்தது
காரணம் உங்கள் தீய மதி
