Gangai Karaiyil Vilaintha

Gangai Karaiyil Vilaintha Song Lyrics In English


பாடலாசிரியர் : கண்ணதாசன்

கங்கை கரையில்விளைந்த கவிதை மங்கை அவளின் மலர்ந்த முகமே

கங்கை கரையில் விளைந்த கவிதை மங்கை அவளின் மலர்ந்த முகமே கங்கை கரையில் விளைந்த கவிதை மங்கை அவளின் மலர்ந்த முகமே

கோடை மலையில் ஆடும் மயிலே கொஞ்சினால் கிள்ளை அவளே கோடை மலையில் ஆடும் மயிலே கொஞ்சினால் கிள்ளை அவளே

கங்கை கரையில் விளைந்த கவிதை மங்கை அவளின் மலர்ந்த முகமே

புள்ளி மானாக துள்ளி வந்தாலும் பொன்மேக கூந்தல் சதிராடும் புள்ளி மானாக துள்ளி வந்தாலும் பொன்மேக கூந்தல் சதிராடும்

தண்டை தாலாட்ட இடை சீராட்ட கண் கெண்டை மீனாக விளையாடும் தண்டை தாலாட்ட இடை சீராட்ட கண் கெண்டை மீனாக விளையாடும்

தத்திடும் மேகலை சப்தம் இடும்படி முத்து ரதங்களின் ஊர்வலம் வந்தது சலங் சலங் எனும் இசை சுகம் சுகம் எனும் மொழியோ ஆஹாஹாஹ்ஆ லலலாஆஹாஹ்

கங்கை கரையில் விளைந்த கவிதை மங்கை அவளின் மலர்ந்த முகமே மங்கை அவளின் மலர்ந்த முகமே


பச்சை இலை மீது பள்ளிக் கொண்டாலும் பெண் குறிஞ்சி மலராய் உருமாறும் பச்சை இலை மீது பள்ளிக் கொண்டாலும் பெண் குறிஞ்சி மலராய் உருமாறும்

பட்டு முகத்தோடு நாணம் வந்தாலும் தன் மேனி கலையில் நிறம் மாறும் பட்டு முகத்தோடு நாணம் வந்தாலும் தன் மேனி கலையில் நிறம் மாறும்

கற்பனை மன்னனவன் கண்கள் படும்படி நிற்பது மென்மையின் அற்புத காவியம் அகம் புறம் இரண்டிலும் அவள் சுகம் அவன் உறவே ஆஹாஹாஹ்ஆஅ லலலாஆஹாஹ்

கங்கை கரையில் விளைந்த கவிதை மங்கை அவளின் மலர்ந்த முகமே மங்கை அவளின் மலர்ந்த முகமே

அகநானூறு உந்தன் வரலாறு உன் அழகு என்றும் பதினாறு புறநானூறு இது எனுமாறு நம் கண்ணும் கண்ணும் தகராறு

செங்கனி மேனியில் அம்புலி ஆடிட மங்கல குங்குமம் மந்திரம் போட இடம் பொருள் அறிந்தொரு சுகம் தரும் துணை நீயே ஆஹாஹாஹ்ஆஅ லலலாஆஹாஹ்

கங்கை கரையில் விளைந்த கவிதை மங்கை அவளின் மலர்ந்த முகமே ஆஹாஹாஹ்ஆஅ ஓஹ்ஹோஓ