Gangai Nadhi Meeno |
|---|
ஆஅஆஆஆஅ
ஆஅஆஆஆஅ
ஆஅஆஆஆஅ
கங்கை நதி மீனோ
மங்கை விழிதானோ
கங்கை நதி மீனோ
மங்கை விழிதானோ
அங்கம் யாவும்
தங்கப் பாலம்
பொங்கிப் பாயும்
ஆசை வேகம் தனனன
கங்கை நதி மீனோ
மங்கை விழிதானோ
பாவை உனைத் தழுவ
நெஞ்சில் பாடல் மலருதடி
பாவை உனைத் தழுவ
நெஞ்சில் பாடல் மலருதடி
காதல் உலகில்
மாலை மயக்கம்
கனியே ஏனடி தயக்கம்
காதல் உலகில்
மாலை மயக்கம்
கனியே ஏனடி தயக்கம்
வெக்கத்துக்கு
வேலை இல்லை
பக்கம் வந்தால்
பாவம் இல்லை
வாலிபத்தின் சந்தையில்
வெட்கம் விலை போகாது
கங்கை நதி மீனோ
மங்கை விழிதானோ
அங்கம் யாவும்
தங்கப் பாலம்
பொங்கிப் பாயும்
ஆசை வேகம் ஆஹாஹா
கங்கை நதி மீனோ
மங்கை விழிதானோ
பாரி வள்ளல் தேர் கொடுத்தால்
பச்சைக் கொடியும் படராதோ
அந்தக் கொடியும் இடம் கொடுத்தால்
மிச்சக் கதையும் தொடராதோ
கை இரண்டில் இடை
கொடியாய் துவள
கனி இதழ் தேன் தனைப் பருக
கை இரண்டில் இடை
கொடியாய் துவள
கனி இதழ் தேன் தனைப் பருக
கோடி சுகம்
கொஞ்சட்டுமே
கொள்ளை இன்பம்
அள்ளட்டுமே
உள்ளம் கொஞ்சம் கெஞ்சட்டும்
மன்மதக் கலைகள்
கங்கை நதி மீனோ
மங்கை விழிதானோ
அங்கம் யாவும்
தங்கப் பாலம்
பொங்கிப் பாயும்
ஆசை வேகம் தனனன
கங்கை நதி மீனோ
மங்கை விழிதானோ
