Gopala Govinda Mugunda

Gopala Govinda Mugunda Song Lyrics In English


கோபாலா கோவிந்தா
முகுந்தா வைகுந்தா
ஹரே ஹரே பாண்டுரங்கா
ஹரே ஹரே பாண்டுரங்கா

மார்கழி மாசம் காலை இது
ஆஹா பஜன பண்ணும் வேளை இது
மார்கழி மாசம் காலை இது
ஆஹா பஜன பண்ணும் வேளை இது

புடவையை திருடிய பரந்தாமா
ஆஆஆஆஆ
புடவையை திருடிய பரந்தாமா
உன் பக்தரைத் தெருவில் விடலாமா

இருவர் : மார்கழி மாசம் காலை இது
பஜன பண்ணும் வேளை இது
மார்கழி மாசம் காலை இது
பஜன பண்ணும் வேளை இது

கோபாலா கோவிந்தா
முகுந்தா வைகுந்தா
ஹரே ஹரே பாண்டுரங்கா
ஹரே ஹரே பாண்டுரங்கா

என்னுடைய வாத்தியத்த
வச்ச எடம் நல்ல இடம்

ஆமா ஆமா நல்ல இடம்

என்னுடைய வாத்தியத்த
வச்ச எடம் நல்ல இடம்

எப்பொழுதும் தங்கிக் கொள்ள
வசதி எல்லாம் உள்ள இடம்
எப்பொழுதும் தங்கிக் கொள்ள
வசதி எல்லாம் உள்ள இடம்

ஜால்ராவ தட்டுங்கடா
மத்தளத்த கொட்டுங்கடா

மத்தளத்த கொட்டுங்கடா

பஞ்சமத்த குரலிருக்கு
பஞ்சமத்த எட்டுங்கடா
ஆஅஆஅஆஅஆஅ
பஞ்சமத்த குரலிருக்கு
பஞ்சமத்த எட்டுங்கடா

கோபாலா கோவிந்தா
முகுந்தா வைகுந்தா
ஹரே ஹரே பாண்டுரங்கா
ஹரே ஹரே பாண்டுரங்கா

பொத்தலுல வாய வச்சி
புல்லாங்குழல் ஊதுறப்போ

ஆமா ஆமா ஊதுறப்போ

புல்லரிச்சி போகுதப்பா
பக்தி ரசம் ஊறுதப்பா


பொத்தலுல வாய வச்சி
புல்லாங்குழல் ஊதுறப்போ

புல்லரிச்சி போகுதப்பா
பக்தி ரசம் ஊறுதப்பா

காலேஜ்ஜுல சேர்ந்திருந்தும்
காவிகள கட்ட வச்சான்

பட்டதாரி ஆக வந்தோம்
பட்ட நாமம் போட வச்சான்

காலேஜ்ஜுல சேர்ந்திருந்தும்
காவிகள கட்ட வச்சான்

பட்டதாரி ஆக வந்தோம்
பட்ட நாமம் போட வச்சான்

கோபாலா கோவிந்தா
முகுந்தா வைகுந்தா
ஹரே ஹரே பாண்டுரங்கா
ஹரே ஹரே பாண்டுரங்கா

சின்னஞ்சிறு பசங்களத்தான்
குனிய வச்சி ஏறி நின்னு

ஆமா ஆமா ஏறி நின்னு

வெண்ணையினை விளையாட்டா
கண்ணபிரான் எடுத்ததுண்டு

நாயகனப் பாடுங்கடா
ஞான வெண்ண கையில் வரும்

கோபியரின் கூட்டமெல்லாம்
கோலாட்டம் போட வரும்

கோபாலா கோவிந்தா
முகுந்தா வைகுந்தா
ஹரே ஹரே பாண்டுரங்கா
ஹரே ஹரே பாண்டுரங்கா
ஹரே ஹரே பாண்டுரங்கா
ஹரே ஹரே பாண்டுரங்கா
ஹரே ஹரே பாண்டுரங்கா
ஹரே ஹரே பாண்டுரங்கா

சர்வத்சர கோவிந்த நாம சங்கீர்த்தனம்

அனைவரும் : கோவிந்தா கோவிந்தா