Hey Paadal Ondru

Hey Paadal Ondru Song Lyrics In English


ஆஆ ஆஆஆ
ஆஆஆ
ஹா ஆஆ ஆஆ

ஹே பாடல்
ஒன்று ராகம் ஒன்று
சேரும் போது அந்த கீதம்
அதை மீண்டும் மீண்டும்
கேட்கத் தோன்றும்

ஹே பாடல்
ஒன்று ராகம் ஒன்று

மின்னல் உந்தன்
பெண்மை என்னைத்
தாக்கும் ஆயுதம்
மேகம் உந்தன் கூந்தல்
மலர் ஆடும் ஊஞ்சலாம்
ஹோய் ஹோய் மேகம்
உந்தன் கூந்தல் மலர்
ஆடும் ஊஞ்சலாம்

என் ஜோடிக்
கிளியே கன்னல் தமிழே
தேனில் ஆடும் திராட்சை
நீயே

ஹே பாடல்
ஒன்று ராகம் ஒன்று

தீபம் கொண்ட
கண்கள் என்னை
நோக்கும் காதலில்
தாகம் கொண்ட நெஞ்சம்
என்னைப் பார்க்கும்
ஜாடையில் ஹோய்
ஹோய் தாகம் கொண்ட
நெஞ்சம் என்னைப் பார்க்கும்
ஜாடையில்


இளம் காதல்
ராஜா கண்ணா உந்தன்
நெஞ்சில் ஆடும் தேவி
நானே

ஹே பாடல்
ஒன்று ராகம் ஒன்று

நேரம் இன்ப
நேரம் விழி போடும்
ஓவியம்
ஓரம் நெஞ்சின்
ஓரம் சுவையாகும்
காவியம் ஹோய்
ஹோய் ஓரம் நெஞ்சின்
ஓரம் சுவையாகும்
காவியம்

ஒரு மாலை
நேரம் மன்னா உந்தன்
மார்பில் ஆடும் மாலை
நானே

ஹே பாடல்
ஒன்று ராகம் ஒன்று
சேரும் போது
அந்த கீதம் அதை
மீண்டும் மீண்டும்
கேட்கத் தோன்றும்
ஹே பாடல் ஒன்று
ராகம் ஒன்று