Idhayam

Idhayam Song Lyrics In English


செந்தீ விழுந்த
செம்பொற் பாறையில்
மந்தி உருட்டும் மயிலின்
முட்டையாய்

நல்ல மரத்தின்
நறுங்கிளை எழிந்து
வெள்ளச் சுழியில்
விழுந்து மலராய்

இதயம் நழுவி
நழுவி நகர்ந்து நகர்ந்து
நகர்ந்து போகுதே ஏனோ
சொல் ஏனோ ஏனோ சொல்
சொல் ஏனோ சொல்வாயோ
ஏனோ சொல் சொல் ஏனோ
சொல்வாயோ

இதயம்
கரைகள் மறந்து
திசைகள் தொலைந்து
போகுதே ஏனோ
சொல் ஏனோ ஏனோ
சொல் சொல் ஏனோ
சொல்வாயோ

பூப்பது மறந்தன
கொடிகள் புன்னகை மறந்தது
மின்னல் காய்ப்பது மறந்தது
காடு காவியம் மறந்தது ஏடு

ஏனோ
ராணா ராணா
யானோ நின்னை
மறக்கினேன் நின்னை
மறக்கினேன் நின்னை
மறக்கினேன்


ஆஆ ஆஆ ஆ
ஆ ஆஆ ஆ ஆஆ ஆஆ
ஆ ஆ ஆஆ ஆ ஆஆ ஆஆ
ஆ ஆ ஆஆ ஆ

இதயம் நழுவி
நழுவி நகர்ந்து நகர்ந்து
நகர்ந்து போகுதே ஏனோ
சொல் ஏனோ ஏனோ சொல்
சொல் ஏனோ சொல்வாயோ
ஏனோ சொல் சொல் ஏனோ
சொல்வாயோ

செந்தமிழ் பிரியும்
சங்கம் செங்கடல் பிரியும்
அலைகள் ஒலியைப் பிரியும்
காற்று உளியைப் பிரியும்
சிற்பம்

வாசத்துக்கேது
சிறைவாசம்
யானோ நின்னைப்
பிரிகினேன் பிரிகினேன்
பிரிகினேன் யானோ நின்னைப்
பிரிகினேன் பிரிகினேன்
பிரிகினேன்

சிறைகோட்டு
பெரும்பயம் தூங்கி யாங்கு
என் உயிரோ சிறிதே
காதலோ பெரிதே