Idhayam Thudikkirathe |
---|
இதயம் துடிக்கிறதே தாளம் கிடைக்கிறதே
பாடல் பிறக்கிறதே பாசம் மலர்கிறதே
இதயம் துடிக்கிறதே தாளம் கிடைக்கிறதே
பாடல் பிறக்கிறதே பாசம் மலர்கிறதே
இதயம் துடிக்கிறதே தாளம் கிடைக்கிறதே
பாடல் பிறக்கிறதே பாசம் மலர்கிறதே
காதல் கடலில் நான்தானே
ஊமை தீவாய் ஆனேனே
நாளும் உன்னை மட்டும் எண்ணி கொண்டே
உயிர் வாழ்கிறேன்
இதயம் துடிக்கிறதே தாளம் கிடைக்கிறதே
பாடல் பிறக்கிறதே பாசம் மலர்கிறதே
நிலவோடு இங்கே விளையாட வந்தேன்
பிறை போதும் என்றே உறவாடுகின்றேன்
எனக்கான மேகம் இங்கே திசை மாறுதே
இமை மீறும் கண்ணீர் என்னை விலை பேசுதே
அணை போட்டும் நெஞ்சில்
அலை வீசக் கண்டேன்
தரை மீது மீனைப் போலே
தடுமாறினேன்
சின்னக் குயிலை தாலாட்டும்
நெஞ்சில் மௌன போராட்டம்
நானோ உள்ளங்கையில் தண்ணீர் கேட்டு
உன்னைப் பார்க்கிறேன்
இதயம் துடிக்கிறதே தாளம் கிடைக்கிறதே
பாடல் பிறக்கிறதே பாசம் மலர்கிறதே
ஓஒஓஒஓஹ்
ஓஒஓஒஓஹ்
குழந்தை : ஊரெங்கும் தெய்வம்
சிலையாக கண்டேன்
எனக்கான தெய்வம் நடமாட கண்டேன்
குயில் பாட்டு என்னை
வந்து குளிப்பாட்டுதே
நிழல் கேட்டு வந்த சொந்தம் உயிர் மீட்குதே
குழந்தை : உயிரோடு இங்கே
உனை சூடிக்கொண்டேன்
இதயத்தில் தீபம் போல
உனை ஏற்றினேன்
குழந்தை : நெஞ்சில் தொட்டில் கொடுத்தாய்
கண்ணில் பொத்தி வளர்த்தாய்
நாளை நீயும் நானும் நிலா போல
கனா காண்கிறேன்
குழந்தை : இதயம் துடிக்கிறதே தாளம் கிடைக்கிறதே
பாடல் பிறக்கிறதே பாசம் மலர்கிறதே
இதயம் துடிக்கிறதே தாளம் கிடைக்கிறதே
பாடல் பிறக்கிறதே பாசம் மலர்கிறதே
காதல் கடலில் நான்தானே
ஊமை தீவாய் ஆனேனே
நாளும் உன்னை மட்டும் எண்ணி கொண்டே
உயிர் வாழ்கிறேன்
இதயம்
குழந்தை : துடிக்கிறதே
தாளம்
குழந்தை : கிடைக்கிறதே
பாடல்
குழந்தை : பிறக்கிறதே
குழந்தை மற்றும் பாசம் மலர்கிறதே