Idhu Enna – Takku Mukku Tikku Thalam

Idhu Enna – Takku Mukku Tikku Thalam Song Lyrics In English


பாடலாசிரியர்  : லலித் ஆனந்து

இது என்ன புதுவித அனுபவம் இவளுக்குள் நடக்குதே அதிசயம்

இடைவெளி குறைகிறதே இதம் இதமாய் இருக்கிறதே

இது என்ன புதுவித அனுபவம் இவளுக்குள் நடக்குதே அதிசயம்

தினம் இவள் பார்வையில் படுவது சுகம் இது போதுமடி இதுவரை இருந்திட்ட தயக்கமும் இதுவா இதுவரை அறிந்திடா மயக்கமும் இதுவா

இவள் கிடைத்தாள் என் துயர் துடைத்தாள் என் கனவிலும் நினைவிலும் நிலைத்து விட்டாள்

இவன் முகத்தில் என் இதழ் பதித்தேன் என் செருக்குகள் அனைத்தையும் உடைத்து விட்டான்

கல்லாய் நேற்று தெருவினில் கிடந்தேன் கண்ணால் பார்த்து செதுக்கி விட்டாள்

முள்ளாய் நேற்று தெரிந்தவன் வழியில் பூவாய் இன்று தெரிந்து விட்டான்


இரண்டு துருவம் இணையுமா இணையுதே இனிதாய்

அடி விழலாம் ஓர் இடி விழலாம் நான் இவள் தரும் வலி எனில் பொறுத்திடுவேன்

இவன் மடியில் நான் விழுந்து விட்டேன் என் இயல்புகள் முழுவதும் தொலைத்து விட்டேன்

மாஞ்சா நூலில் மல்லிகைப்பூ தொடுத்து ரோஜா வாசம் கொடுத்து விட்டாள்

செல்லாக்காசு என இவன் தெரிந்தான் எல்லாமாக மாறி விட்டான்

நினைத்ததெல்லாம் நடக்குமா நடக்குதே எனக்கு

இது என்ன புதுவித அனுபவம் இவளுக்குள் நடக்குதே அதிசயம்