Idhu Ilamai Ezhuthum |
---|
ஹேய் ஹேய்
லால் லா லா லல லா லல லா
லால் லா லா லல லா லல லா
இது இளமை எழுதும் கதை
இரு இதயம் படிக்கும் அதை
புது சுகங்கள் இங்கே உண்டாக
இளம் பருவம் இங்கே வண்டாக
மனம் சிறகை விரிக்குதே
புது வசந்தங்கள் மலர் பொழிந்திட
இது இளமை எழுதும் கதை
இரு இதயம் படிக்கும் அதை
புது சுகங்கள் இங்கே உண்டாக
இளம் பருவம் இங்கே வண்டாக
மனம் சிறகை விரிக்குதே
புது வசந்தங்கள் மலர் பொழிந்திட
இது இளமை எழுதும் கதை
மண்ணில் வந்த பொன் நிலவு
மையல் மூட்டும் உன் வயது
மூவாறு
ஆண் காதல் தேனாறு
தென்றலோடு பூமரங்கள்
சேதி சொல்லும் வேளையிலே
பொங்காதோ
பெண் தேன் கங்கை இங்கே
கங்கை நதி நீயானால் ஓடம் நானே
இன்பக்கரை காண்போமே காதல் மானே
ஆசை மின்னல் மின்னும்
அன்பே உன்னால் விழியோரம்
இது இளமை எழுதும் கதை
இரு இதயம் படிக்கும் அதை
புது சுகங்கள் இங்கே உண்டாக
இளம் பருவம் இங்கே வண்டாக
மனம் சிறகை விரிக்குதே
புது வசந்தங்கள் மலர் பொழிந்திட
இது இளமை எழுதும் கதை
கண்கள் மயங்கும் கலையழகு
சிற்பக் கோயில் சிலையழகு
சொல்லாதோ
பெண் கதைகள் சொல்லாதோ
வெள்ளி மணலும் பாய் விரிக்க
துள்ளிக் குதித்து நாம் சிரிக்க
ஆனந்தம்
ஆண் எங்கும் ஆனந்தம்
நீலக்கடல் அலைப் போலே நெஞ்சம் தாவும்
வாலிபங்கள் புயல் போலே ராகம் பாடும்
பாடலுடன் தாளம் போலே
கைகள் கலந்தாடும்
இது இளமை எழுதும் கதை
இரு இதயம் படிக்கும் அதை
புது சுகங்கள் இங்கே உண்டாக
இளம் பருவம் இங்கே வண்டாக
மனம் சிறகை விரிக்குதே
புது வசந்தங்கள் மலர் பொழிந்திட
இது இளமை எழுதும் கதை