Indha Kalyanam

Indha Kalyanam Song Lyrics In English


இந்த கல்யாணம் இன்ப கல்யாணம்
இது காதல் வைபோகம்
இந்த கல்யாணம் இன்ப கல்யாணம்
இது காதல் வைபோகம்

மலர் மாலைகள் சூடும் மண நாள் இதுவே
சுப லாலிகள் பாடும் சுப நாள் இதுவே

இந்த கல்யாணம் இன்ப கல்யாணம்
இது காதல் வைபோகம்

ஒன்றான உள்ளங்கள் எந்நாளும் மாறாது
நீரோடு நீர் சேர்ந்தால் பேதம் தோன்றாது
பூ மங்கையே இனி இந்த நாணம் ஆகாது
பூ மங்கையே இனி இந்த நாணம் ஆகாது

அந்நேரம் முந்தானை மெல்ல நழுவும்
ஆளேதும் காணாமல் வந்து தழுவும்
அம்மாடியோ காலை நேரம்
மை பூசும் உன் கண்கள் பொய் பேசும்

இந்த கல்யாணம் இன்ப கல்யாணம்
இது காதல் வைபோகம்


உழைக்கின்ற வர்க்கங்கள் ஒன்றாக சேராதோ
பேதங்கள் பாராமல் சொந்தங்கள் ஆகாதோ
வாழும் இனம் இனி பொற்காலம் காணாதோ
வாழும் இனம் இனி பொற்காலம் காணாதோ

சங்கீத கச்சேரி இன்று வழங்க
சம்மந்தி மேளங்கள் கொட்டி முழங்க
தள்ளாடியே பூவும் பூவும்
ஒன்றோடு ஒன்றாகி செண்டாக

இந்த கல்யாணம் இன்ப கல்யாணம்
இது காதல் வைபோகம்
மலர் மாலைகள் சூடும் மண நாள் இதுவே
ஆஅஆஹ்
சுப லாலிகள் பாடும் சுப நாள் இதுவே

இந்த கல்யாணம் இன்ப கல்யாணம்
இது காதல் வைபோகம்