Indha Ooril

Indha Ooril Song Lyrics In English


பழநிமல உச்சியில
பாரத்தெல்லாம் எறக்கிவச்சு
சொக்கம்பட்டி காட்டுக்குள்ள
கரும்புவெட்டும் காளைகளா
கட்டெறும்பு காயப்படாம
கணுக்கணுவா பாத்து வெட்டு

இந்த ஊரில் எப்பவுமே
கெட்டதே நடக்காதுடா
இங்க எறும்பு கூட
யாரையுமே கடிக்காது டா

இந்த ஊரில் எப்பவுமே
கெட்டதே நடக்காதுடா
நடக்காது டா
இங்க எறும்பு கூட யாரையுமே
கடிக்காது டா
கடிக்காது டா

ஹேய் வெட்டுறவன் வெட்டினா
தித்திக்கும்டா கரும்பு
குத்துறவன் குத்தினா
ரத்தம் கொட்டும் உடம்பு

வெட்ட வெட்ட வாழையாவோம்
கொட்ட கொட்ட தேனீ ஆவோம்
கஷ்டமுனு வந்தா
கவலப்பட மாட்டோம்
நஷ்டமுனு வந்தா
நடையக்கட்ட மாட்டோம்

வெற்றி வேலு முருகன்
வெற்றியத்தான் கொடுப்பான்
வீரவேலு முருகன்
எங்க வீரத்தில இருப்பான்

இந்த ஊரில் எப்பவுமே
கெட்டதே நடக்காது டா
நடக்காது டா

பச்சரிசி பொங்கவச்சு
பூச நடத்தணும்
நல்ல நாளு இந்த நாளு
கட்டுக்கட்டா கரும்பெடுத்து
கடிச்சு நொறுக்கணும்
நல்லா சொன்ன வேலு வேலு

மருதமல முருகனுக்கு
அலகு குத்தி வந்தோம்
மதுரைவீரன் சாமிக்குத்தான்
அருவா அடிச்சு தந்தோம்

மாரியம்மன் காவலால
நல்லா இருக்கு ஊரு
அண்ணன் தம்பி போலதானே
ஒண்ணா இருக்கோம் பாரு
நல்ல எண்ணங்கள வெதையா
வெதச்சாக்கா
மேகம் இல்லாம மழை அடிக்கும்

சிலம்பெடுத்துப்போனா
சூரியனைத்தொடுவான்
சிறகடிச்சுப்போனா
சந்திரன புடிப்பான்

கஷ்டமுனு வந்தா
கவலப்பட மாட்டோம்
நஷ்டமுனு வந்தா
நடையக்கட்ட மாட்டோம்


வெற்றி வேலு முருகன்
வெற்றியத்தான் கொடுப்பான்
வீரவேலு முருகன்
எங்க வீரத்தில இருப்பான்

 

வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு
பழையபேச்சு டா
ஆமா ஆமா வேலு வேலு
ஏ குண்டு ஒண்ணு போட்டாக்கா
துண்டு நூறு அடா
போட்டான் பாரு ஒரே போடு

அரசமரத்து புள்ளையாரு
சுண்டலத்தான் கேக்கும்
எங்க ஊரு புள்ளை எல்லாம்
சண்டையத்தான் கேக்கும்

ஆறறிவு எல்லாருக்கும்
பொதுவாக இருக்கும்
ஆறாவது விரலு மட்டும்
சிலருக்குத்தான் இருக்கும்

சூரக்காத்திலையும்
சூடம் ஏத்திடுவோம்
எதிரி எவனும் இங்கவர
மாட்டான்

வேலுக்கம்பு அருவா
ஆயுதங்க எதுக்கு
வேலு கூட இருந்தா
வெற்றி தானே நமக்கு

இந்த ஊரில் எப்பவுமே
கெட்டதே நடக்காதுடா
நடக்காது டா
இங்க எறும்பு கூட யாரையுமே
கடிக்காது டா
கடிக்காது டா

ஹேய் வெட்டுறவன் வெட்டினா
தித்திக்கும்டா கரும்பு
குத்துறவன் குத்தினா
ரத்தம் கொட்டும் உடம்பு

வெட்ட வெட்ட வாழையாவோம்
கொட்ட கொட்ட தேனீ ஆவோம்
கஷ்டமுனு வந்தா
கவலப்பட மாட்டோம்
நஷ்டமுனு வந்தா
நடையக்கட்ட மாட்டோம்

வெற்றி வேலு முருகன்
வெற்றியத்தான் கொடுப்பான்
வீரவேலு முருகன்
எங்க வீரத்தில இருப்பான்

Tags