Indha Poonthendral

Indha Poonthendral Song Lyrics In English


இந்த பூந்தென்றல்
காற்று இனி வீசும் என்னை
பார்த்து நான் ராஜாதி
ராஜனம்மா ஓஹோ

அன்பு ராஜ்ஜியம்
ஒன்று என் கைகளில்
வந்தது இன்று உன்
ராஜாங்கம் செல்லாததம்மா
ஓஹோ

நெஞ்சில் சின்ன
சின்ன ஆசைகள் கூடியது
எங்கள் வீரத்துக்கு
வாரிசு தோன்றியது
இந்த சொந்தம்
என்றும் விலகாது ஓஹோ

இந்த பூந்தென்றல்
காற்று இனி வீசும் என்னை
பார்த்து நான் ராஜாதி
ராஜனம்மா ஓஹோ

சொல்லாத ஆசை
ஒன்னு நெஞ்சுக்குள்ளே
இருக்கு உன்னோடு வென்று
அதை முடித்திடுவேன்

கண்ணா உன்
குறும்புக்கு வச்சிருக்கேன்
கணக்கு எப்போதும் உன்னை
இங்கு தொடர்ந்திடுவேன்

அன்பு சொந்தத்துக்கும்
முத்துமணி மாலை ஆச்சி
சொத்து சுகம்
அத்தனைக்கும் நான் ஆச்சு
அன்பினாலே துள்ளும்
இல்லம் சொர்க்கம் போல் ஆச்சு

இந்த பூந்தென்றல்
காற்று இனி வீசும் என்னை
பார்த்து நான் ராஜாதி
ராஜனம்மா ஓஹோ


இந்த ஜாதிமல்லி பூவு
கன்னம் செவந்திருக்கு
காரணங்கள் யாரடியோ
மச்சான் காரியத்த பாரடியோ

நான் போடும்
வட்டத்துக்குள் உன்னைச்
சுற்றி வளைப்பேன்
வேலியை தாண்டிச்
செல்ல முடியாது

ஆஹா பூவினை
போல உன்னை மெல்ல
மெல்ல பறிப்பேன்
வண்டுக்கு சட்டம் போட
கூடாது

அந்த வெண்ணிலவு
தோளில் வந்து கைகள் போடும்
தென்றல் வந்து வாசல்
எங்கும் பூ தூவும்
வானம் பூமி யாவும்
எங்கள் தங்க தேரோடு

இந்த பூந்தென்றல்
காற்று இனி வீசும் என்னை
பார்த்து நான் ராஜாதி
ராஜனம்மா ஓஹோ

நெஞ்சில் சின்ன
சின்ன ஆசைகள் கூடியது
எங்கள் வீரத்துக்கு
வாரிசு தோன்றியது
இந்த சொந்தம்
என்றும் விலகாது ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ