Indha Vanam Andha Megam

Indha Vanam Andha Megam Song Lyrics In English




இந்த வானம் அந்த மேகம் ஒண்ணு சேரும் நல்ல நேரம் அன்பே வா என் மடியிலே கண்ணே வா கைப்பிடியிலே கல்யாணம் தான் முடிக்க

இந்த வானம் அந்த மேகம் ஒண்ணு சேரும் நல்ல நேரம்



பிரியாமல் ஸ்ருதியும் லயமும் உறவாடுது புதிதான இசையும் கவியும் உருவானது ஆகாய மின்னல் போல நீ மாறலாம் அலங்கார ஆடைக் கொண்டு அரங்கேறலாம் பொன் மேனி குளிர மோகம் வளர ஒருவர் இதயம் ஒருவரிடத்தில் அடைக்கலமோ

இந்த வானம் அந்த மேகம் ஒண்ணு சேரும் நல்ல நேரம் அன்பே வா என் மடியிலே கண்ணே வா கைப்பிடியிலே கல்யாணம் தான் முடிக்க

இந்த வானம் அந்த மேகம் ஒண்ணு சேரும் நல்ல நேரம்

உனை நானும் உரச உரச இதமானது ஓயாமல் தழுவ தழுவ பதமானது நீங்காமல் கண்ணில் ஆடும் செம்மாங்கனி நாள்தோறும் நானே சூடும் சிந்தாமணி கை மேலும் கீழும் தீண்ட தீண்ட இளமை எழுதும் இனிய கவிதை புரிந்திடுமோ


இந்த வானம் அந்த மேகம் ஒண்ணு சேரும் நல்ல நேரம்



இளந்தோகை சரசம் பயில எதிர்பார்க்குது இரவோடு விரகம் விளைய உடல் வேர்க்குது பாய் போடு ஆசை தீர போராடலாம் பூபாளம் கேட்கும் வரை நீராடலாம் என் ஆதி அந்தம் உந்தன் சொந்தம் இழுத்து இழுத்து அணைக்க இடம் தருமோ

இந்த வானம் அந்த மேகம் ஒண்ணு சேரும் நல்ல நேரம் அன்பே வா என் மடியிலே கண்ணே வா கைப்பிடியிலே கல்யாணம் தான் முடிக்க

இந்த வானம் அந்த மேகம் ஒண்ணு சேரும் நல்ல நேரம்

இருவர் : லல்ல லாலா லல்ல லாலா லல்ல லாலா லல்ல லாலா