Indru Kaatrukkum Malarukkum

Indru Kaatrukkum Malarukkum Song Lyrics In English


இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம்
இங்கு கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்
இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம்
இங்கு கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்

நீல நதிக் கரையில் ஊர்கோலமாம்
முகில் நீந்தி விளையாடும் கார்காலமாம்
நீல நதிக் கரையில் ஊர்கோலமாம்
முகில் நீந்தி விளையாடும் கார்காலமாம்

இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம்
இங்கு கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்

பாக்கு மரங்களின் நிழல் ஓரம்
நல்ல பவழ மல்லிகைகள் பாய் போட

ஆஹாஆஹாஓஹோஓஹோ

பாக்கு மரங்களின் நிழல் ஓரம்
நல்ல பவழ மல்லிகைகள் பாய் போட

மாலைப் பொழுதோடு பனித் தூவ
மெல்ல மாறன் விளையாட்டு அரங்கேற
மாலைப் பொழுதோடு பனித் தூவ
மெல்ல மாறன் விளையாட்டு அரங்கேற
ரதி மாறன் விளையாட்டு அரங்கேற

இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம்
இங்கு கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்

நீல நதிக் கரையில் ஊர்கோலமாம்
முகில் நீந்தி விளையாடும் கார்காலமாம்


இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம்
இங்கு கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்

சோலை வனங்களின் வழி தோறும்
சின்னஞ் சிறிய மின்மினிகள் விளக்கேற்ற

ஆஹாஆஹாஏஹேஹே ஏஹேஹே

சோலை வனங்களின் வழி தோறும்
சின்னஞ் சிறிய மின்மினிகள் விளக்கேற்ற

போதை மெதுவாகத் தலைக்கேற
மண்ணில் பாதம் பதியாமல் தடுமாற
போதை மெதுவாகத் தலைக்கேற
மண்ணில் பாதம் பதியாமல் தடுமாற
வண்ணப் பாதம் பதியாமல் தடுமாற

இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம்
இங்கு கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்

நீல நதிக் கரையில் ஊர்கோலமாம்
முகில் நீந்தி விளையாடும் கார்காலமாம்

இருவர் : இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம்
இங்கு கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்